'நம்ம யாரு வம்பு தும்புக்கும் போறதில்ல...' 'பேசாம தூங்குவோம்...' 'என்ட்ரி ஆன திருடன்...' அடேய்... உன்ன மலை போல நம்பினேனே...! இப்படி கவுத்துட்டியே...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெரும்பாலான வீடுகளில் நாய்கள் வீட்டை பாதுகாக்கவும், உரிமையாளருக்கு ஆபத்து ஏற்படும்போது அதை தடுக்கவும் வளர்க்கப்படுகிறது.

'நம்ம யாரு வம்பு தும்புக்கும் போறதில்ல...' 'பேசாம தூங்குவோம்...' 'என்ட்ரி ஆன திருடன்...' அடேய்... உன்ன மலை போல நம்பினேனே...! இப்படி கவுத்துட்டியே...!

ஆனால் பல வீடுகளில் செல்லப்பிராணிகளான நாய்கள் வீட்டின் அங்கமாக மாறிவிடுகிறது எனலாம். இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள ஒரு சைபீரியன் ஹஸ்கி நாயானது, இக்கட்டான சூழ்நிலையில் தன் உரிமையாளரை காப்பாற்றாமல் அமைதியாக யாரையும் தொந்தரவு செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வோராவட் லோம்வானாவோங் என்னும் நகை கடை உரிமையாளர் ஹஸ்கி என்ற நாயையை வாங்கியுள்ளார், அதிலிருந்து இந்த ஹஸ்கி தங்களுக்கு ஒரு குழந்தை போல இருந்ததாகவும், தற்போது தன் குடும்பத்தில் ஒருவராக மாறியதாக கூறி லக்கி என்ற பெயரையும் வைத்துள்ளார்.

லக்கி நாயானது பாதுகாப்பு பணியின் ட்ரைனிங் கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால்  ஹஸ்கியானது திருடன் கையில் கத்தியுடன் வந்த போதும் கடைக்கு காவல் இருக்காமல் சுகமாக படுத்து தூங்கிகொண்டிருந்ததாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வானது கடந்த பிப்ரவரி 16 அன்று சியாங் மாவில் உள்ள வோராவட் கடையில் துப்பாக்கியுடன் வந்த திருடன் நகை கடையில் இருந்த பணப்பையை ஊழியரை மிரட்டி திருடிச்சென்றுள்ளார் ஆனால் அப்போதும் லக்கி நாய் தூக்கத்தில் இருந்துள்ளது.

சம்பவத்தின்போது கேமரா மூலம் லோம்வானாவோங் பல முறை லக்கியைப் பார்த்தார், கடைசி நேரத்திலாவது லக்கி திருடனை கடித்து குதறும் என எதிர்பாத்தும் நடக்கவில்லை என கூறியுள்ளார் கடையின் உரிமையாளர்.

இதுகுறித்து கூறிய நகைக்கடை உரிமையாளர் 'என் காவல் நாய் கடையை பாதுகாக்காமல், சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைத்ததோ என்னமோ' எனக் கூறி சிம்பிளாக முடித்துக்கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்