'என்ன இது...! டோர் திறக்க மாட்டேங்குது...' அத போட்டுட்டீங்களா...? 'இப்போ ஒப்பன் பண்ணுங்க...' ஆச்சரியப்படுத்தும் அல்டிமேட் ஸ்கேனர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்தால் மட்டும் கடைகளின் கதவு திறக்கப்படும் என புதுவித ஸ்கேனருடன் கூடிய தானியங்கி கதவை உருவாக்கியுள்ளனர்.

சுற்றுலா தலமாக விளங்கும் தாய்லாந்து நாடு கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையை பொறுத்ததே அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளது. ஆனால் கடந்த 7 மாதங்களாக கொரோனா அச்சம் காரணமாக அந்நாட்டு அரசு வெளிநாட்டு பயணிகளை அனுமதிவில்லை.

இந்நிலையில் தற்போது, குறிப்பிட்ட அளவில் மட்டும் சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்கு அனுமதிக்க உள்ள நிலையில் தாய்லாந்து அரசு, கொரோனா பரவலை தடுப்பதற்காக புதுவித தொழில் நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். 

அதாவது தாய்லாந்து நாட்டில் இருக்கும் அனைத்து சிறிய மற்றும் பிரபலமான கடைகள் பலவற்றில் தானியங்கி கதவும், ஸ்கேனர்களும் பொருத்தியுள்ளனர்.

கடைகளில் பயன்படுத்தப்படும் தானியங்கி கதவானது,  கடைக்கு வரும் நபர்களை ஸ்கேன் செய்து அவர்கள் மாஸ்க் அணிந்துள்ளார்களா என உறுதிப்படுத்திக் கொண்டே கதவை திறக்கிறது. மாஸ்க் அணியாத நபர்களுக்கு 'அனுமதி இல்லை' என தெரிவிக்கின்றது.

தாய்லாந்தில் பின்பற்றப்படும் இந்த புதுவித தொழில் நுட்பத்தின் வீடியோவானது டுவிட்டரில் 67 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்