‘அதை பத்தியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது’!.. கடுப்பாகி செய்தியாளர்கள் மீது சானிடைசர் ஸ்பிரே அடித்த தாய்லாந்து பிரதமர்.. பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய்லாந்தில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் கடுப்பான அந்நாட்டு பிரதமர் செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா (Prayuth Chan-ocha) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ராணுவ புரட்சியின்போது அந்நாட்டு அரசுக்‍கு எதிராக 3 அமைச்சர்கள் போர்க்‍கொடி தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக 3 அமைச்சர்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்த 3 அமைச்சர்களையும் நீக்‍கிய பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, அமைச்சரவையையும் மாற்றி அமைத்தார்.

இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் வழக்‍கமான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்ததும், அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், அந்த 3 அமைச்சர்களை பதவி நீக்‍கம் செய்து அமைச்சரவை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினார்.

 

செய்தியாளரின் இந்த கேள்வியால் கோபமடைந்த பிரயுத் சான் ஓச்சா, மேஜை மீது வைக்‍கப்பட்டிருந்த சானிடைசரை எடுத்துக்‍கொண்டு செய்தியாளர்களை நோக்‍கி வந்தார். பின்னர் அமர்ந்திருந்த செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்தார். இச்சம்பவம் அங்கிருந்த செய்தியாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்