நம்பி வந்த ஜோடிகளின் 2000 அந்தரங்க வீடியோ.. WiFi வடிவில் ரகசிய கேமரா .. நடுங்க வைத்த உரிமையாளர்.. சிக்கியது எப்படி?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பலரும் தங்கி வந்த விடுதி ஒன்றின் உரிமையாளர் செய்த செயல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

ஒரே வருஷம் தான்.. பணம் டபுள் ஆகிடும்.. நம்பிப்போன பெண்ணிற்கு நடந்த சோகம்..!

பொதுவாக, விடுதிகளில் ஒருவர் தங்கும் போது, நமக்கே தெரியாமல் சில குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

நாம் எந்த அளவுக்கு கவனமாக இருந்தாலும் கூட, சில விபரீத விஷயங்கள் நமக்கே தெரியாமல் நடந்து விடுகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான், அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில், ஏர்பிஎன்பி என்ற பிரபல தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியின் உரிமையாளராக ஜேய் அல்லீ (வயது 54) இருந்துள்ளார்.

அறையில் சோதனை

அப்போது, இவரது விடுதியில் ஒரு தம்பதியினர் வந்து தங்கியுள்ளனர். அந்த சமயத்தில், அவர்கள் அந்த விடுதிக்குள் ரகசிய கேமரா ஏதேனும் இருக்கிறதா என்பதை ஒரு முன் எச்சரிக்கையாக தேடியுள்ளனர். இணையத்தில், ரகசிய கேமராவை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி, தேடித் தெரிந்து கொண்டு, தங்களின் அறையில் சோதித்து பார்த்துள்ளனர்.

வைஃபை வடிவில் கேமரா

அந்த நேரத்தில் தான், தம்பதியினர் இருவருக்கும் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஆம். அந்த அறையில் ரகசிய கேமரா ஒன்று இருந்துள்ளது. வைஃபை கருவி வடிவில், அதனுடன் ரகசிய கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பதனை தம்பதிகள் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக, இது பற்றி அவர்கள் போலீசாருக்கு புகார் தெரிவிக்கவே, பல்வேறு அதிர்ச்சி தகவல் விசாரணையில் வெளிவந்தது.

ரகசிய கேமரா

ஜேய் அல்லீயிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதலில் தனக்கும் இதற்கு எந்த சம்மந்தமும் இல்லை என கூறியுள்ளார். அது வைஃபை கருவி தான் என்றும் ரகசிய கேமரா இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, போலீசார் ஆய்வு செய்து பார்த்த போது, அதற்குள் ரகசிய கேமரா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் பிறகு, ஜெய் அல்லீயிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

2000 வீடியோக்கள்

அது மட்டுமில்லாமல், அந்த விடுதியில் தங்கியிருந்த 2000 நபர்களின் அரை நிர்வாண படங்கள் மற்றும் உடலுறவு மேற்கொள்ளும் வீடியோக்களையும் ஜெய் எடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக, தன்னுடைய விடுதியில் தங்கியிருந்த நபர்களின் வீடியோக்களை இந்த ரகசிய கேமரா மூலம் கண்காணித்து எடுத்துள்ளார்.

பறிமுதல் செய்த போலீசார்

அவரிடம் இருந்த மொபைல் போன், லேப்டாப் மற்றும் டேப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த சில மாதத்திற்கு முன் ஜேய் அல்லீ கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த விஷயம் தெரிந்து அந்த விடுதியில் தங்கியிருந்த ஏராளமானோர், தற்போது புகாரளித்துள்ளனர்.

இதனையும் புகார்களாக மாற்றி, ஜேய் அல்லீ மீது அதிக வழக்குகள் பதிவு செயப்பட்டுள்ளது. ஒரு ஆண்டாக விடுதியின் உரிமையாளர் இப்படி ஒரு செயலில் ஈடுபட்ட சம்பவம், பலரையும் பதற்றம் அடைய செய்துள்ளது.

ஒரு நீதிபதி பேரன் செய்ற காரியமா இது?.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..! இப்படி ஒரு நிலைமைக்கு என்ன காரணம்.. ?

TEXAS, SECRETLY RECORD VIDEO, GUEST, ரகசிய கேமரா, விடுதி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்