'ஓமிக்ரான்' வைரஸால நம்ம 'வாழ்க்கைய' இழக்குறதுக்கு பதிலா...' பேசாம 'இத' பண்ணிட்டு போலாம்...! - WHO இயக்குனர் விடுத்த எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்பண்டிகை கால கூட்டங்களில் ஓமிக்ரான் வைரஸ் அதிக பரவ வாய்ப்புள்ளதால் உயிரை விட கொண்டாட்டம் பெரிதல்ல என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் டிசம்பர் மாதம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பொது இடங்களுக்கு சென்று பண்டிகை நாளை கொண்டாடுவார்கள். அதோடு பூங்கா, மால்ஸ், பொழுது போக்கான இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் சேரும்.
ஆனால் பண்டிகை மாதமான டிசம்பரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஒமைக்கரான் வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. வரும் நாட்களில் பொதுமக்கள் இன்னும் அதிகளவில் கூடும் போது, ஒமைக்ரான் வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளை ரத்து செய்ய வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுக்குறித்து ஜெனிவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ் அதானோம் 'அமெரிக்கா இப்போதிருக்கும் சுழலில் மிகுந்த பாதுக்காப்போடு இருக்க வேண்டும். இன்னும சில வாரங்களில் ஓமிக்ரான் பாதிப்பு ஆதிக்கம் செலுத்தும் என அந்நாட்டு சுகாதார அமைப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சுழலில் பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேணடும் அல்லது தள்ளிப்போட வேண்டும். நம்முடைய வாழ்க்கை முழுவதுமாக இந்த பூமியில் இருந்து ரத்தாவதைவிட, நிகழ்ச்சி ரத்தாவது சிறந்தது.
தற்போது கொண்டாடி விட்டு பின்னர் வருத்தப்படுவதை விட, தற்போது ரத்து செய்து விட்டு பின்னர் கொண்டாடுவது சிறந்தது' என கூறியுள்ளார். இதுவரை அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு சராசரி ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பனிப்புதைவில் இருந்து நீட்டிக் கொண்டிருந்த மனித கைகள்!.. விசுவாசமான நாயின் ‘சமயோஜிதத்தால்’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்!
- 'தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறல்'... 'பச்சிளம் பிஞ்சுக்கு வந்த விசித்திர நோய்'... 'ஒரு ஊசியின் விலை 16 கோடி'... துணிவுடன் போராடும் பெற்றோர்!
- 'இப்ப நான் என்ன செஞ்சுட்டு இருக்கேன் தெரியுமா?'.. “சொன்னதும் திக்குமுக்காடி போயிட்டாங்க!”.. தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்.. சினிமாவுக்கு சென்ற தம்பதியால் அழகாக மாறிய ‘வாழ்க்கை’.. வைரல் பதிவு!
- அப்பா ‘உயிரை’ காப்பாற்றிய மகன் கொடுத்த ‘கிஃப்ட்’.. வாழ்க்கையை நொடியில் மாற்றிய அந்த ‘பொருள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!
- பூமிக்கு அருகில் இருக்கும் வெள்ளி கிரகத்தில்... உயிர்கள் வாழும் சூழல்!.. மேகங்கள் சொல்லும் செய்தி!.. விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்!
- “பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்!”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ!
- “உடற்பயிற்சி.. யோகா.. ஆர்கானிக் உணவு மட்டும் போதுமா?” .. ஆரோக்கியமா இருக்கணும்னா “இதுதான்” அவசியம்! - உலகின் அதிரடி ரிப்போர்ட்!
- 'தடம் புரண்ட பொறியியல் கனவு.. நொடியில் மாறிய வாழ்க்கை'.. ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ வீடியோ!
- 'இதயங்களை வென்ற குட்டி யானை'.. 'அதன் க்யூட்டான செயலுக்கு'.. குவியும் பாராட்டுக்கள்.. வீடியோ!
- “இருதய அடைப்பால் தவித்த அணில்”.. இதயத்தை நெகிழ வைக்கும் இளைஞர்களின் செயல்.. வைரல் வீடியோ!