அல்ரெடி 'அந்த வைரஸ்' 104 நாடுகளுக்கு பரவிடுச்சு...! 'அதோட விளைவுகள் ரொம்ப மோசமா இருக்க போகுது...' - எச்சரிக்கும் WHO நிறுவனர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் மாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் 104 நாடுகளுக்கு பரவிவிட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

அல்ரெடி 'அந்த வைரஸ்' 104 நாடுகளுக்கு பரவிடுச்சு...! 'அதோட விளைவுகள் ரொம்ப மோசமா இருக்க போகுது...' - எச்சரிக்கும் WHO நிறுவனர்...!

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலக மக்களுக்கு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை குறைந்தப்பாடில்லை.

கொரோனா வைரஸை அழிக்க முடியாமல் பல நாடுகள் திண்டாடி வரும் நிலையில் கொரோனா வைரசோ வெவ்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் அவற்றை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசை டெல்டா வகை கொரோனா என அழைக்கின்றனர். இது மற்ற வகைகளை வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது.

அதோடு இம்மாதிரியான உருமாற்றம் அடைந்து பரவும் வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் இதுகுறித்து கூறும் போது, 'இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் இதுவரை 104 நாடுகளில் பரவி இருக்கிறது.

இவை விரைவில் உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸாக டெல்டா வகை கொரோனா இருக்கும்' எனவும் எச்சரித்துள்ளார்.

அதோடு இதன் தீவிர பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்