'பூஸ்டர்' டோஸ்களால் 'கொரோனாவ' கட்டுப்படுத்த முடியுமா...? - WHO இயக்குனர் அளித்த பதில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸை பூஸ்டர் டோஸ்களால் மட்டுமே அழித்து விட முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

கொரோனா வைரஸ் பரவ தொடங்கி அதற்கான தடுப்பூசிகள் கண்டு பிடிக்கப்பட்ட காலங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்தனர். ஆனால், இப்போது உலகின் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தடுப்பூசி விநியோகத்தில் சமநிலையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றால் அந்த நாடுகளில் இருந்து தான் புதுப்புது உருமாற்றங்களுக்கே வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு நீண்ட நாளாக எச்சரித்து வருகிறது.

தற்போது கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரன் உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் டெட்ராஸ் அதோனம் உலக நாடுகள் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுவது கொரோனா பெருந்தொற்று காலத்தை நீட்டிக்குமே தவிர முடிவுக்குக் கொண்டு வராது என்று புது வித அறிவிப்பை கூறியுள்ளார்.

இதுக்குறித்து கூறிய அவர், 'உலக நாடுகள் அனைத்தும் அவற்றின் மக்களை தொகையில் 40% மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை மேலை நாடுகள் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை நிறுத்திவைக்கலாம்.

உலக நாடுகள் வெறும் பூஸ்டரில் கவனம் செலுத்துவதைவிட தடுப்பூசி சரியாக விநியோகிக்கப்படாத பகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்தலாம். தடுப்பூசி செலுத்தப்படாத பகுதி தான் கொரோனா உருமாறும் களமாக உள்ளது. பூஸ்டர் கொரோனா பெருந்தொற்று காலத்தை நீட்டிக்குமே தவிர முடிவுக்குக் கொண்டு வராது.

ஐ.நா. புள்ளிவிவரத்தின்படி பார்த்தோம் என்றால் ஆப்பிரிக்காவில் 4-ல் மூன்று சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. அதிக வருவாய் கொண்ட நாடுகளில் 67% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் 10% பேர் கூட முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. முதலில் இந்தத் தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சீரமைக்க வேண்டும்.

பூஸ்டர் டோஸ் அதிகமாக செலுத்தப்பட்டுவிட்டதால் புத்தாண்டு கொண்டாட்டங்களை, கூட்டங்களை அனுமதிக்கலாம் என்று அர்த்தமாகிவிடாது' என டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.

CORONAVIRUS, TETROS ADONAM, CORONA VIRUS, BOOSTER, டெட்ரோஸ் அதோனம், பூஸ்டர், கொரோனா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்