'அப்படி என்ன நடந்தது ஆபீஸ்ல'... 'முன்னாள் ஊழியருக்கு 1000 கோடி ரூபாய் இழப்பீடு'... ஆடிப்போன டெஸ்லா நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முன்னாள் ஊழியர் தொடர்ந்த வழக்கில் , டெஸ்லா நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எலக்ட்ரிக் கார்களில் உலகின் முன்னோடியாக இருப்பவை டெஸ்லா கார்கள். உலகின் பல நாடுகளிலும் சிறந்து விளங்கும் டெஸ்லா கார்கள், எலக்ட்ரிக் கார்களிலேயே மதிப்புமிக்க பிராண்டாக விளங்கி வருகிறது. இதன் நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் தான் தற்போது அதன் முன்னாள் ஊழியருக்கு 1000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஓவன் டியாஸ் என்ற கறுப்பினத்தவர், வடக்கு கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா ஆலையில் , லிஃப்ட் இயக்குபவராக பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சக பணியாளர்கள் இனப்பாகுபாடு காட்டியதாகவும் இன ரீதியான வார்த்தைகளைக் கூறி துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இது தொடர்பாகப் புகார் அளித்தும் டெல்ஸா நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்றும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட ஓவன் டியாஸுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு டெஸ்லா நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்