‘அமெரிக்க மக்களை முட்டாள் மாதிரி நடத்துறாரு’!.. அதிபர் ஜோ பைடனை ‘பகிரங்கமாக’ விமர்சித்த எலான் மஸ்க்.. அப்படி என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க மக்களை அதிபர் ஜோ பைடன் முட்டாள் போல நடத்துதாக எலான் மஸ்க் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம் குறித்து அந்நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிரபல எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கிறது’ என பெருமையாக குறிப்பிட்டிருந்தார். இதிலும் டெஸ்லா நிறுவனம் குறித்து குறிப்பிடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த டெஸ்லா நிறுவனத்தில் தலைவர் எலான் மஸ்க், ‘ஜோ பைடன் மனித வடிவில் இருக்கும் ஒரு பொம்மை’ என டுவீட் செய்தார். இது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம், அதை அமெரிக்காவில் உருவாக்குவது பெருமையாக உள்ளதாக ஜோ பைடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க், ‘ஜோ பைடன் அமெரிக்க மக்களை முட்டாள்கள் போல் நடத்துகிறார்’ என பகிரங்கமாகவே விளாசினார். இது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, இதுவரை சுமார் 9,36,172 எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்துள்ளது. ஆனால் ஜெனரல் மோட்டார்ஸ் 24,828 எலக்ட்ரிக் கார்களையும், போர்டு 27,140 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரித்துள்ளது. ஆனாலும் டெஸ்லா நிறுவனத்தின் பெயரை ஜோ பைடன் குறிப்பிடவில்லை என்பதுதான் எலான் மஸ்க்கின் கோபம் என சொல்லப்படுகிறது. டெஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தை இந்தியாவில் தொடங்க தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TESLA, ELONMUSK, JOEBIDEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்