என்ன எலான் மஸ்க்கோட மண்ட ஒரு ‘திணுசா’ இருக்கு.. இதுக்கு அவர் சொன்ன பதில்தான் அல்டிமேட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஹேர் ஸ்டைல் குறித்து எலான் மஸ்க் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்ன எலான் மஸ்க்கோட மண்ட ஒரு ‘திணுசா’ இருக்கு.. இதுக்கு அவர் சொன்ன பதில்தான் அல்டிமேட்..!
Advertising
>
Advertising

அமெரிக்க பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் (Elon Musk) எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது டெஸ்லா (Tesla) நிறுவனம் உலகத்திலேயே அதிக மதிப்பு கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது. இதன் பங்கு சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. உலகத்தில் என்ன நடந்தாலும் அது குறித்து எலான் மஸ்க் ட்வீட் செய்வதும், அது பேசுபொருளாக மாறிவரும் வாடிக்கையாகி வருகிறது.

Tesla CEO Elon Musk about his hair style

அந்த வகையில் டெஸ்லா சிலிக்கான் வேலி (Tesla Silicon Valley Club ) என்ற ட்விட்டர் பக்கம் எலான் மஸ்க்கின் போட்டோவை பதிவிட்டு ‘நைஸ் ஹேர்கட்’ என பதிவிட்டுள்ளது. அதற்கு, ‘இதை நானே வெட்டினேன்’ என எலான் மஸ்க் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இதை நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களாக உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்க வேண்டுமா என்று ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். அந்த வாக்கெடுப்பின் முடிவில் அதிகமானோர் பங்குகளை விற்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனால் இரண்டு நாள்களில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 16 சதவீதம் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

TESLA, ELONMUSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்