'உடம்பு' முழுவதும் 'பட்டாசை' சுற்றிக் கொண்டு... உடல் மேல் 'பெட்ரோலை' ஊற்றி... அதிகாரிகளை 'பதற' வைத்த நபர்...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் பிறந்தநாள் பார்டிக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் விரக்தியடைந்த நபர் ஒருவர் தனது உடல் முழுவதும் பட்டாசை சுற்றிக் கொண்டு, பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சீனா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாங் என்பவர் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். விருந்தினர்களுக்காக பல்வேறு விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சிகளுக்காக அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதற்கு முயன்றபோது, அனுமதி தர மறுத்து விட்டனர். இதனால் வாங் விரக்தியடைந்தார்.
வீட்டில் சோகமாக இருந்த அவர், சிறிது நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தவராய், தனது உடல் முழுவதும் பட்டாசுகளை சுற்றிக் கொண்டு கையில் பெட்ரோல் கேனுடன் அனுமதி மறுத்த அதிகாரிகளின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது மார்பில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்தக் கொள்ள முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சுதாரித்துக் கொண்டு விரைந்து செயல்பட்டு வாங்கை காப்பாற்றினர்.
இருப்பினும் தீ லேசாக பற்றிக் கொண்டதால் வாங்கிற்க சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலையில் வாங் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எனக்கு ‘கொரோனா’ இருக்கு... யாரும் ‘கிட்ட’ வாராதீங்க... ‘கற்களால்’ தாக்கியவர்... ‘அடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- கொரோனா என்பது ஃபேமிலி பேராம்... ஒரிஜினல் பேரை அறிவிச்சிருக்காங்க WHO... ஏன்? எதற்கு?... தகவல் உள்ளே...
- சத்தமில்லாமல் 'பிரிட்டனுக்குள்' நுழைந்த 'கொரோனா'... 'அச்சத்தில்' பிரிட்டன் மக்கள்...
- ஓடி ஒளியிற பழக்கம் எனக்குக் கிடையாது... 'பெய்ஜிங்' நகரில் நேரில் ஆய்வு செய்த சீன அதிபர்... விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த 'ஜிஜின்பிங்'
- 'வேக்சின்' கண்டுபிடிச்சாச்சு... விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும்... 'இரவு பகலாக' நடைபெறும் 'சோதனை'...
- ‘ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்ட’.... ‘சொகுசு கப்பலில்’... ‘மதுரையைச் சேர்ந்த ஒருவர் உள்பட’... ‘தமிழர்கள் 6 பேர் உள்ளதாக தகவல்’!
- 'கொரோனாவை' வென்ற 'கேரள' மாணவி... 10 நாள் சிகிசையில் 'பூரண குணம்'... 'வைரஸ்' பீதியிலிருந்து 'விடுதலை'...
- தானாக முன்வந்து ‘பரிசோதித்து’ கொண்டால் ‘பரிசு’... நாளுக்கு நாள் ‘அதிகரிக்கும்’ பலி எண்ணிக்கை... ‘தீவிர’ நடவடிக்கையில் இறங்கிய அரசு...
- "சீன அதிபர் 'ஜி ஜின்பிங்' எங்கே?..." "என்ன ஆனார்...?" "ரகசிய இடத்தில் தஞ்சமா...? கோபத்தில் கொந்தளிக்கும் 'சீன' மக்கள்...