'மதுவே குடிக்காமல் அடிக்கடி போதையாகும் பெண்'... 'ச்சே, அந்த பொண்ணு பொய் சொல்லலாம்னு நினைச்ச மருத்துவர்கள்'... பரிசோதனையில் தெரிய வந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மது பழக்கம் அறவே இல்லாத பெண் ஒருவர், அடிக்கடி போதையாகி வருகிறார். மதுவைத் தொடக் கூட செய்யாத அந்த பெண் எப்படி போதையாகிறாள் என்பது குறித்த விசித்திர தகவலை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

அமெரிக்காவைச் சேர்ந்த சாரா லிபிப்வ்ரே (Sara Lefebvre) என்ற பெண்ணுக்கு சுத்தமாக மது அருந்தும் பழக்கமே இல்லை. ஆனால், இவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, மதுவை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

ஆனால், மது அருந்தாத சாராவுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு, அண்மையில் தான் சாராவுக்கும், சாராவை பரிசோதித்த மருத்துவர்களுக்கும் சாராவின் உடலில் என்ன பிரச்சனை உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. ஆட்டோ பிரீவரி சின்றோம் (auto-brewery syndrome) என்ற மிக மிக அரிதான நோய் ஒன்று சாராவுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக, அவரின் உடலில் தானாகவே மது சுரக்கப்பட்டு, அவரது ஈரல் பாதிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது.

முன்னதாக, இந்த அரிய நோயின் காரணமாக, சாரா தனது தினசரி வாழ்க்கையில் பல்வேறு இடர்களை சந்தித்து வந்துள்ளார். உதாரணமாக, வாகனம் ஓட்டும் போது மது அருந்தியுள்ளதாக கூறி போலீசாரிடம் சிக்குவது என பல்வேறு காரணங்களால் சாரா தவித்து வந்துள்ளார்.

'இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் தற்போது இருக்கும் நிலையால் அல்ல, பல மருத்துவர்கள் அப்படி ஒரு நோய் இருப்பதை முதலில் நம்பவேயில்லை. நான் மது எடுத்துக் கொள்வதால் தான் எனது ஈரல் பாதிக்கப்பட்டதாக அவர்கள் நம்பினார்' என சாரா துக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தற்போது இதற்கான மாத்திரை எடுத்து வரும் சாரா, விரைவில் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்