'ICUவில் தம்பியின் கையை பிடித்திருந்த அக்கா'... 'ஆக்சிஜனை நிறுத்தப்போன மருத்துவர்கள்'... 'டேய் தம்பி, அக்கா ஒண்ணு சொல்வேன்'... அடுத்த செகண்ட் நடந்த அதிசயம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மூளைச் சாவு அடைந்து, உடல் உறுப்புகளை தானம் செய்ய இருந்த நிலையில் யாரும் எதிர்பார்த்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 18 வயது இளைஞர் Lewis Roberts. இவர் கடந்த 18ம் தேதி வேன் ஒன்று மோதியதில் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கினார். அப்போது Lewisக்கு தலையில் பயங்கரமாக அடிபட்டது. உடனே அவர் ஹெலிஹாப்டர் மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள்.

இதையடுத்து 4 நாட்கள் Lewis கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விடை கொடுக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து Lewisக்கு கொடுக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசத்தை நிறுத்த முடிவு செய்தனர். இதனால் மொத்த குடும்பமும் கண்ணீர் விட்டுக் கதறியது. இறுதியாக மகனின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு தானம் செய்ய Lewisயின் பெற்றோர் முடிவு செய்தனர்.  

அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை அகற்றுவதற்காக Lewisக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை செயற்கை சுவாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே Lewisயின் மீது அளவு கடந்த பாசம் கொண்ட அவரின் அக்கா Jade Robert, ICUயில் தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டு அவரது கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டே இருந்துள்ளார். இது தான் தனது அன்புத் தம்பியுடன் கடைசியாகப் பேசுவது என்பதை உணர்ந்த அவர், தம்பி, நான் ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொல்வேன். உடனே நீ சுவாசிக்க வேண்டும் எனத் தனது மனதில் தோன்றியதைக் கூறியுள்ளார்.

உடனே அங்கு வந்த செவிலியர்கள், அறுவை சிகிச்சைக்கு நேரம் ஆகிறது எனவே நீங்கள் வெளியில் செல்லாமல் எனக் கூறியுள்ளனர். அப்போது இறுதியாக, டேய் தம்பி நான் சொல்ல போகிறேன் என ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொல்லியுள்ளார். அப்போது சினிமாவில் நடப்பது போல அவர் சொல்லி முடித்ததும் Lewis மூச்சு விட்டுள்ளார். சுவாசிக்க ஆரம்பித்த Lewis, அனைவரும் ஆச்சரியப்படும் விதமாகக் கண்களைச் சிமிட்டத் தொடங்கினார்.

உடனே ICUக்கு விரைந்த மருத்துவர்கள் ஒரு நிமிடம் ஆடிப் போனார்கள். அதற்குக் காரணம் மூளைச் சாவு அடைந்த ஒருவர் மீண்டும் உயிர் பெறுவது உலகிலேயே இது இரண்டாவது முறையாகும். தற்போது Lewis, கால்களை அசைக்கவும், தலையை அசைக்கவும், கண்ணிமைக்கவும், வாயை அசைக்கவும் தொடங்கியுள்ளார். இறந்து விட்டதாகக் கருதி உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என முடிவு செய்த நிலையில், Lewis உயிர் பிழைத்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்