'ஒரே ஒரு போஸ்ட் தான்'...'மொத்த ட்ரெண்டும் காலி'...உலக அளவில் வைரலான 'பள்ளி மாணவி'!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது பள்ளி பிரிவு உபசார நிகழ்விற்காக,17 வயது மாணவி தயாரித்த கவுன் உலக அளவில் பிரபலமாகியுள்ளது.பல்வேறு பிரபல ஆடை வடிவமைப்பாளர்களும் 17 வயது மாணவிவிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பள்ளி மாணவி சியரா கன்.இவர் தனது பள்ளி பள்ளி பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரத்யேகமான அலங்கார கவுனை அவரே வடிவமைத்துள்ளார்.அதில் அக்ரிலிக் பெயின்ட் மூலம் 80 மலர்களை வரைந்து, அலங்காரக் கல் வேலைப்பாடுகள் வைத்து ஒரு மாத காலம் மிகக்கடுமையாக உழைத்து அந்த கவுனை உருவாக்கியுள்ளார்.கவுனின் ஒவ்வொரு வேலைப்பாடுகள் முடிந்த நிலையில் அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவர் போட்ட சில மணி நேரத்திலிலேயே அது உலக அளவில் வைரலாகி சுமார் 4 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்தது.இதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கின.பல்வேறு பிரபல ஆடை வடிவமைப்பாளர்களும் 17 வயது சியராவின் திறமையை கண்டு வியந்து போனார்கள்.பலரும் அந்த கவுன் என்ன விலையானாலும் பரவாயில்லை நான் வாங்கி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்கள்.
இதனிடையே ட்விட்டரில் கிடைத்துள்ள பலத்த வரவேற்பு, சியரா கன்னை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் தொடர்ந்து இதுபோன்ற ஆடை வடிவமைப்பில் ஈடுபடுவீர்களா என சியராவை கேள்விகளால் துளைத்து வருகிறார்கள்.இதுபோன்ற எதிர்பாராத பாராட்டினால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார் சியரா கன்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்