போராட்டத்தால 'ஏரியா' ஃபுல்லா குப்பையா கெடக்கு... 10 மணி நேரம், ஒன் மேன் ஆர்மியாக... அசத்திய 18 வயது இளைஞர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை போலீசார் ஒருவர் தனது காலை கொண்டு இறுக்கி வைத்த நிலையில் ஜார்ஜ் உயிரிழந்தார்.

Advertising
Advertising

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் போராட்டக்களமாக மாறியது. இனவெறிக்கு எதிராக கொரோனா பீதியையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொது இடங்களில் வந்து போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த படுகொலைக்கு பல நாட்டிலுள்ள மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள புஃபலோ (Buffalo) நகரில் கடந்த 10 நாட்களாக போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பயன்படுத்திய பதாகைகள், குடிநீர் பாட்டில்கள், பிற உணவு பொருட்கள் ஆகியவற்றை சாலையிலேயே விட்டு சென்றனர். அதே நேரத்தில் கலவரத்தினால் சில பொருட்களும் உடைந்து போயுள்ளன.

இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞரான அண்டோனியோ க்வின் ஜூனியர், அசுத்தத்தால் நிரம்பிய அந்த பகுதியை சுத்தப்படுத்த துடைப்பம் மற்றும் குப்பையிடும் பைகளை வாங்கி கொண்டு தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார். இரவு 2 மணிக்கு ஆரம்பித்த நிலையில் சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக அதுவும் தனி மனிதனாக அந்த பகுதி முழுவதையும் சுத்தம் செய்து அசத்தியுள்ளார். தொலைக்காட்சிகள் மூலமாக இந்த செய்தி எங்கும் பரவ, அப்பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், இளைஞரின் அசத்தல் முயற்சிக்கு அவருக்கு பிடித்தமான காரை பரிசளித்துள்ளார்.

அதே போல, அப்பகுதியை சேர்ந்த காப்பீட்டு நிறுவனம் ஒன்று, அடுத்த ஒரு வருடத்திற்கான இலவச காப்பீட்டு தொகையை வழங்கியுள்ளது. மேலும், இளைஞர் க்வின்னின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்ட கல்லூரி ஒன்று அவரின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதாக அறிவித்துள்ளது.

போராட்டத்தினால் அப்பகுதி அசுத்தம் ஆன நிலையில், அதனை பத்து மணி நேரம் செலவு செய்து தனியாளாக சுத்தம் செய்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்