இந்த வெங்காயத்தை உரிச்சா இனி ‘கண்ணீர்’ வராது.. 35 வருச ஆராய்ச்சிக்கு கிடச்ச வெற்றி.. ஆனா ‘விலை’ எவ்ளோ தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உரித்தால் கண்ணீர் வராத வெங்காயத்தை கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர்.

Advertising
>
Advertising

கண்களில் நீர் வராமல் வெங்காயத்தை நறுக்குவது எப்படி என பல டிப்ஸ்களை அன்றாடம் யூடியூப்பில் பார்க்கிறோம். இந்த நிலையில் பிரிட்டனில் உரித்தால் கண்ணீர் வராத வெங்காயம் சந்தைக்கு வரவுள்ளது. இந்த வெங்காயம் உரிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண நினைத்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பயிர் வளர்ச்சி ஆராய்ச்சியாளர் ரிக் வாட்சன் (Rick Watson) என்பவர் பல வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டார்.

35 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாக தற்போது உரித்தால் கண்ணீர் வராத வெங்காயத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த வெங்காயத்துக்கு பெயர் சனியன் (Sunion) என வைத்துள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் இவை இப்போது பிரிட்டன் சந்தையில் வரும் 18-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில காலத்திற்கு விற்கப்பட உள்ளது.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் கண்ணீர் தராத வெங்காயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வகையைச் சேர்ந்தது அல்ல என்பதுதான். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக கிராஸ் பிரீடிங் எனப்படும் பயிர் கலப்பின முறையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த சனியன் என்ற வெங்காயம்.

பிரிட்டனில் உள்ள Waitrose பல்பொருள் அங்காடி நிறுவனம் முதன்முறையாக இந்த வகை வெங்காயத்தைக் விற்க முடிவு செய்துள்ளது. இந்த வெங்காயத்தின் விலை சுமார் 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் சாதாரண வெங்காயம் சுமார் 14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ONIONS, TEARLESS

மற்ற செய்திகள்