"கேக்க மாட்டீங்க".. மாணவர்களின் செல்போன்களை நெருப்பில் பொசுக்கிய ஆசிரியர்.. காட்டுத்தீயாக பரவும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்களாக உயர்கிறார்கள். அப்படியான குழந்தைகளை கண்ணியத்துடனும் நேர்கொண்ட சிந்தனையுடனும் வளர்க்க வேண்டியது நம் சமூகக் கடமையாகும். இந்த மாபெரும் பயணத்தில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எந்த அளவிற்கு பொறுப்பு உள்ளதோ அதே அளவு ஆசிரியர்களிடத்திலும் உள்ளது.

Advertising
>
Advertising

Russia-Ukraine Crisis: "அவங்களோட நம்பர்.1 டார்கெட் நான்தான்.. என்ன ஆனாலும் சரி".. அதிபரின் உருக்கமான வீடியோ..!

ஆசிரியரின் கட்டுப்பாடுகளுக்கு இணங்காத மாணவர்கள் ஒழுக்கத்துடனும் அறத்துடனும் வாழ முடியாது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அதே வேளையில், மாணவர்களுக்கு தண்டனை அளிப்பது ஆசிரியர்களுக்கு பல பின் விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது.

இந்நிலையில், மொபைல் போன் உபயோகித்ததற்காக மாணவர்களின் போன்களை தீயினுள் விட்டு எரியும் ஆசிரியர் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இந்த சம்பவம் இந்தோனேஷியாவின் பள்ளி ஒன்றில் நடந்திருக்கிறது. ஆனால், பள்ளியின் பெயரோ, ஆசிரியரின் பெயரோ வெளியே வரவில்லை. அந்த விடியோவில் சுற்றி மாணவர்கள் நிற்கின்றனர். அப்போது ஆசிரியர் ஒருவர் தனது கையில் இருந்த ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை அருகில் இருந்த தீ எரியும் பெரிய டிரம்மிற்குள் எறிகிறார்.

இப்படி கையில் இருந்த போன்களை எல்லாம் பொங்கல் வைத்த பிறகு அந்த ஆசிரியர் அங்கிருந்து நகர, அடுத்து ஒரு ஆசிரியர் அவரிடம் இருந்த போன்களை நெருப்பிற்குள் எறிகிறார். இதனை பார்த்துக்கொண்டு இருந்த சிறுவர்கள் அழுகை நிரம்பிய குரலில் கூச்சலிடுகின்றனர்.

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மாணவர்களின் மொபைல் போன்களை நெருப்பில் ஆசிரியர் ஒருவர் தூக்கி எறியும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதும் நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த ஆசிரியர் செய்ததை தவறு என்ற வகையில் சுட்டிய ஒருவர்," தனக்கு சொந்தமில்லாத பொருளை ஒருவர் எப்படி அழிக்கலாம்? அந்த போன்களை சில நாட்கள் கழித்து மாணவர்களிடமே ஒப்படைத்து இருக்க வேண்டும்" என கமெண்ட் செய்திருக்கிறார். இன்னொரு இன்னொரு நபர் அந்த ஆசிரியர் செய்தது சரிதான் என்றும் அப்போதுதான் மாணவர்கள் செல்போன் அடிக்ஷனில் இருந்து வெளியே வருவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இந்த வீடியோவை வைத்து, அந்த ஆசிரியரின் செயலை பாராட்டியும் வசைபாடியும் வருகிறார்கள் நெட்டிசன்கள். ஆசிரியர் செய்தது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்க..

 

தங்கம் வாங்க சரியான நேரம்.. சவரனுக்கு 1200 ரூபாய் சரிவு..!

 

TEACHER, MOBILE PHONE, SCHOOL, ஆசிரியர், செல்போன், மாணவர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்