'தப்புதான்.. 15 வயது டீனேஜ் மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பியிருக்க கூடாது!'.. வருந்தும் 29 வயது ஆசிரியை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவில் 29 வயது ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவருக்கு தன்னுடைய நிர்வான புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவில் உள்ள ஒரு மிடில் ஸ்கூலில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஆசிரியை ரம்சே பெத்தான் பீர்ஸ் (Ramsey Bethann Bearse). கடந்த 2014-ஆம் ஆண்டு கெண்டக்கி மாநிலத்தின் அழகி போட்டியில் (Miss Kentucky) வெற்றி பெற்ற இவர் பின்பு பள்ளியில் பணிபுரிந்துள்ளார்.

அப்போது  இவர் தனது நிர்வாண புகைப்படங்களை, கணவருக்கு அனுப்ப முயற்சி செய்து, தவறுதலாக, தனது பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனுக்கு  ஸ்னாப் சாட்டில் அனுப்பிவிட்டார். ஆனால் அம்மாணவரோ இன்னும் புகைப்படங்களை அனுப்பச் சொல்லி கேட்டதோடு, தனது நிர்வாண படங்களையும் திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் மாணவனுக்கு பயந்து மீண்டும் பீர்ஸ் தனது கூடுதல் படங்களை அனுப்பியுள்ளார்.

மாணவனின் பெற்றோர் இதை மாணவனின் போனில் பார்த்துவிட்டு, அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த வருடம் கைதான பீர்ஸ் 2 மாதம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது விசாரணைக்கு வந்த இந்த வழக்கின்போது, ‘அவர் டீன் ஏஜ் மாணவர். அவருக்கு நான் எனது புகைப்படங்களை அனுப்பியிருக்கக் கூடாது. இது என் தவறுதான், இந்த பழி என்னை மட்டுமே சேரும்’ என்று பீர்ஸ் பேசியுள்ளார்.

இதனையடுத்து பீர்ஸின் வேலை பறிபோனதோடு, அவர் அடுத்த 50 வருடங்களுக்கு பீர்ஸ் ஒரு பாலியல் குற்றவாளியாக கருதப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

WOMAN, TEACHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்