"அட, இதுவா இம்புட்டு லட்ச ரூபா'க்கு ஏலம் போச்சு??".. ராணி எலிசபெத் Use செய்த பொருள்.. விலை'ய கேட்டா தலையே சுத்தும்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த ராணி எலிசபெத், தன்னுடைய 96 வயதில் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.

Advertising
>
Advertising

Also Read | Queen Elizabeth : 91 வருஷமா விரும்பி சாப்பிட்டது பன்பட்டர் ஜாம் தானா..? ராணி எலிசபெத்தின் டயட் சீக்ரெட் உடைத்த அரண்மனை செஃப்

முன்னதாக, ராணி எலிசபெத் இறப்பதற்கு ஒரு சில தினங்கள் முன்பாகவே, அவரது உடல்நிலை சற்று மோசமாக இருந்ததாக தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தனது 96 ஆவது வயதில், ராணி எலிசபெத் காலமானார். அதிக ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்தவர் என்ற பெருமையும் எலிசபெத் வசம் தான்.

ராணி எலிசபெத் மறைவுக்கு உலக அளவில் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர். இதனிடையே, பிரிட்டன் ராணியின் மறைவை நினைவுகூரும் வகையில், அவர் தொடர்பான பொருட்களை ஏலம் விட சிலர் முயற்சி செய்தனர். அப்படி ஒரு பொருள் ஏலம் போன விலை தொடர்பான செய்தி தான், தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

90 களில், தேநீர் குடிப்பதற்காக எலிசபெத் ராணி பயன்படுத்திய ஒரு டீ பேக் ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பயன்படுத்தப்பட்ட இந்த டீ பேக், விண்ட்ஸார் கோட்டையில் இருந்து கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், இணையதளம் ஒன்றில் இந்த டீ பேக் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் சுமார் 12,000 டாலர் வரை ஏலம் விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் விலை, இந்திய மதிப்பில் சுமார் 9.5 லட்சம் ரூபாய் ஆகும்.

ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு, இளவரசர் சார்லஸ் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "7-வல அப்பா இறந்துட்டாரு.. வீட்ல 3 பொண்ணுங்க".. - வெறியுடன் படித்த மாணவி.. உருகிய சிவகுமார் & கார்த்தி.!

QUEEN ELIZABETH, TEA BAG, AUCTION, ராணி எலிசபெத்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்