தமிழக இளைஞருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்.. ஒரே இரவில் தலைகீழான வாழ்க்கை.. "மொத்தமா 67 கோடி ரூபாயாம்"
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாட்டில் வசிக்கும் தமிழக இளைஞருக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை கிடைத்துள்ள விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
பொதுவாக, வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றும் குடும்பத்தினருக்கு சிறந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் பலரும் கடினமாக உழைத்து கொண்டே இருப்பார்கள். இதற்காக பல கஷ்டங்களை தாண்டி வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும் அதே சூழலில், ஒட்டுமொத்தமாக நமது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவங்கள் கூட நிகழ வாய்ப்பு உள்ளது.
அப்படி தான் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் தமிழக இளைஞருக்கு கனவில் கூட நினைக்காத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் காதர் ஹுசைன். இவருக்கு தற்போது 27 வயதாகும் நிலையில், ஷார்ஜாவில் உள்ள கார்களை கழுவி சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 33,000 ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதாகவும் தெரிகிறது.
தனது நிறுவனத்தில் தனக்கு கிடைக்கும் டிப்ஸை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்துள்ளார் காதர் ஹுசைன். அவரது நண்பரான தேவராஜ் என்பவரும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து வைத்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிக் டிக்கெட் டிராவில் இருவரும் சேர்ந்து லாட்டரி டிக்கெட் எடுத்து விளையாடி உள்ளனர்.
அப்படி ஒரு சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன் லாட்டரி குலுக்கல் நடந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில், குடும்பத்தை பார்க்க சொந்த ஊருக்கும் காதர் வந்துள்ளார். இந்த நிலையில், லாட்டரியில் அவருக்கு சுமார் 30 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 67 கோடி ரூபாய் வரை ஆகும். இது தொடர்பாக பிக் டிக்கெட் நிர்வாகத்தினருக்கும் காதரை தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது.
ஆனால் லைவாக குலுக்கலை காதர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தனக்கு பெரிய பரிசு விழுந்ததையும் அறிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அங்கே சென்று பணத்தை பரிசாக பெற்றுள்ள காதர் ஹுசைன், தனது பிறந்தநாளுக்கு சில தினங்கள் முன்பாக இந்த வெற்றி பரிசுக்கான டிக்கெட்டை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தனை பெரிய தொகை கிடைத்ததால் திக்குமுக்காடிப் போன காதர் ஹுசைன், தனது பரிசு பணத்தை நண்பர் தேவராஜுடன் பங்கிட்டு கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால பிக் டிக்கெட் போட்டியின் வரலாற்றில் மிகப்பெரிய பரிசு தொகையாக காதர் பெற்றது பார்க்கப்படும் நிலையில், ஒரே இரவில் தனது வாழ்க்கை மாறிவிட்டதாகவும் இவ்வளவு பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், இந்தியாவில் உள்ள குடும்பத்தை இங்கே அழைத்து வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் பெற்றோருக்கு வீடு கட்டித் தருவேன் என்று கூறியுள்ள காதர் ஹுசைன், பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக தொழில் தொடங்க திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஷார்ஜாவில் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் எடுத்த லாட்டரி டிக்கெட் மூலம் சுமார் 67 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ள சம்பவம் தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.
மற்ற செய்திகள்
இக்கட்டான சூழ்நிலையில் தவித்த அணி.. காயத்துடன் உள்ளே வந்து காட்டு அடி அடித்த ரோஹித்.. தெறி வீடியோ..!
தொடர்புடைய செய்திகள்
- லாட்டரியில் அடிச்ச 41 லட்சம்.. "ஆத்தாடி டிக்கெட்ட எங்க வெச்சேன்னு தெரியலயே".. கவுண்டமணி ஸ்டைலில் தேடிய பெண்.. கடைசில ட்விஸ்ட்!!
- உயிரை விட முயன்ற இளைஞர்.. பெண் போலீஸ் செஞ்ச விஷயம்.. உலகளவில் கவனம் ஈர்த்த நெகிழ்ச்சி சம்பவம்.!
- அண்ணனின் விபரீத முடிவு.. கதறியழுத தம்பிக்கு திடீர்னு நேர்ந்த துயரம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்..!
- 3 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர்.. நள்ளிரவில் இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூரம். !
- ஆசையா வாங்குன பைக்.. காலையில் எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. பொல்லாதவன் தனுஷ் போல களத்தில் இறங்கி இளைஞர் காட்டிய அதிரடி!!..
- 7 மாசம் கழிச்சு திரும்பி வந்த இளைஞர்.. "அவர பாத்ததும் ஷாக் ஆகி நின்ன ஒட்டுமொத்த குடும்பம்.. உலக அளவில் வைரல் சம்பவம்!!
- போன் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்தவரை தாக்கிய மின்சாரம்.. பதறவைத்த சம்பவம்..!
- அப்பா, அம்மா, தங்கைன்னு.. ஒட்டுமொத்த குடும்பத்தையே அழித்த இளைஞர்.. போலீஸ்கிட்ட அவர் சொன்ன காரணம் தான்!!.. அதிர்ச்சி சம்பவம்!!
- காதலி பெயரில் 'டீக்கடை'.. Committed -ஆ இருந்தா 10 ரூபா, Single -னா 5 ரூபா.. மனுஷன் வெற்றிக்கு பின்னாடி இப்டி ஒரு சோக கதையா?..
- "நம்மூருல பொண்ணு பாக்கலாம்னா கேக்குறியா மணியா.?, 25 ஏக்கர் கேக்குறாங்க".. வரன் பார்க்க போன இடத்தில் புலம்பும் இளைஞர்.. வைரல் வீடியோ