"ஒரு வேளை சாப்பாடு.. 12 நாளும் பயத்தோட..".. உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் சொன்ன உருக்கமான தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் இருந்து சென்னை வந்தடைந்த தமிழக மாணவர்கள் தங்களுடைய பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது ஒரு வேளை உணவை மூன்று வேளைகளுக்கும் வைத்துக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Russia – Ukraine Crisis : 800 இந்திய மாணவர்களை மீட்ட பெண் விமானி.. யார் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி?

சிக்கிய மாணவர்கள்

உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட கல்வியை பயின்று வந்த இந்திய மாணவர்கள், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக பாதிப்படைந்தனர். இவர்களை மீட்க, இந்திய அரசு 'ஆப்பரேஷன் கங்கா' என்னும் மீட்பு திட்டத்தை துவங்கியது. இதன் மூலம் 14,000 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைனில் 1,921 தமிழக மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இவர்கள் மீட்பு நடவடிக்கை மூலமாக தாயகம் திரும்பியுள்ளனர். இந்த மீட்புப் பணியில் இறுதியாக மீட்கப்பட்ட 9 மாணவர்கள் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தனர்.

ஒரு வேளை உணவு

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணவர்களில் ஒருவரான மோனிஷா தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில்," நான் உக்ரைனின் சுமி நகரத்தில் மருத்துவம் பயின்று வருகிறேன். பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா தாக்குதலை துவங்கியது. அன்று முதல் பல்கலைக்கழகத்தின் பதுங்கு குழிகளில் அடைக்கப்பட்டோம். முதல் 3 நாட்கள் பிரச்சனை இல்லை. ஆனால், அதன்பிறகு மின்சாரம், குடிநீர் ஆகியவை துண்டிக்கப்பட்டது. நண்பர்கள் வெளியே சென்று பிரெட் உள்ளிட்ட உணவுகளை வாங்கி வருவார்கள். ஒரு வேளை உணவை 3 வேளைகளுக்கு சாப்பிட்டோம். பனியை உருக்கி நீரை குடித்தோம். குண்டுகள் விழும் சத்தம் கேட்டால் பதுங்கு குழிகளுக்குள் சென்றுவிடுவோம். உள்ளே இருந்த 12 நாட்களையும் பயத்துடனேயே கழித்தோம்" என்றார்.

பயணம் குறித்துப் பேசிய மோனிஷா," பின்னர் மார்ச் 8 ஆம் தேதி போலந்திற்கு புறப்பட்டோம். ஏகப்பட்ட பரிசோதனைகள், ஓரு மணிநேரத்தில் கடக்கவேண்டிய தூரத்தை கடக்க ஒருநாள் ஆனது. இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண்கள் சிரமப்பட்டனர். இறுதியாக தமிழகம் வந்து சேர்ந்தது நிம்மதியாக இருக்கிறது " என்றார்.

பயம்

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய பயணம் குறித்து பேசிய அரக்கோணத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற மாணவர்," ஒருகட்டத்தில் நம்மால் தாயகத்திற்கு திரும்ப முடியுமா? என பயம் எழுந்தது. உணவு, நீர் என அடிப்படை தேவைகளுக்கு பற்றாக்குறை இருந்தது. நாங்கள் இருந்த இடத்தில் இருந்து ரஷ்யா 65 கிலோமீட்டர் தூரம் தான். ஆனாலும் உக்ரைன் ராணுவம் எங்களை ரஷ்யாவிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தமிழ் மண்ணில் கால் வைத்த பின்னரே நிம்மதியாக இருக்கிறது" என்றார்.

உணவு கிடைக்காமல், தொடர் தாக்குதலுக்கு இடைய சொந்த ஊர் திரும்பியதாக இந்த மாணவர்கள் கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது என்றே சொல்லவேண்டும்.

"GPay-னு சொல்லி ஏமாத்துவாங்க.. குடிச்சிட்டு வந்து TEA Can-அ உதைப்பாங்க".. Midnight Tea வியாபாரிகளின் சோகம்.. வீடியோ..!

TAMIL STUDENTS, UKRAINE, STRUCK IN UKRAINE, CHENNAI, RUSSIA UKRAINE CRISIS, உக்ரைன், ரஷ்யா, இந்திய மாணவர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்