இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

2. தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

3. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

4. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

5. தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

6. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் 6,761 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆகவும், குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 516 ஆகவும் உயர்ந்துள்ளது.

7. கொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்துள்ளன.

8. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 1,900 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 16,691 ஆக உயர்ந்துள்ளது.

9. பஞ்சாபில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10. டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லிருந்து 8ஆக உயர்ந்துள்ளது.

11. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

12. தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரை செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்