நாலஞ்சு தாலிபான்கள் என் ‘வீட்டுக்கு’ வந்தாங்க.. அப்போதான் தெரிஞ்சது அவங்க யாருன்னு.. பகீர் தகவலை வெளியிட்ட ‘பெண்’ நீதிபதி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் இருக்கும் பெண் நீதிபதிகளுக்கு தாலிபான்களால் ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். முன்னதாக இருந்த தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆட்சி அமைக்க உள்ள தாலிபான்கள், ஷரியத் சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆப்கானில் உள்ள சுமார் 250 பெண் நீதிபதிகளுக்கு தாலிபான்களால் ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதும், அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தாலிபான்கள் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தண்டனை வழங்கிய பெண் நீதிபதிகள் குறித்து விசாரித்து வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆப்கானில் இருந்து வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் Reuters செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘காபூல் உள்ள எனது வீட்டுக்கு நான்கு, ஐந்து தாலிபான்கள் வந்து என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் என்னால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்று. தற்போது ஆப்கானில் இருக்கும் பெண் நீதிபதிகளுடன் தொடர்பில்தான் இருக்கிறேன். தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், விரைந்து மீட்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்’ என பெண் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சர்வதேச பெண் நீதிபதிகள் சங்கம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினரின் உதவியுடன் ஆப்கானை விட்டு பெண் நீதிபதிகள் சிலர் வெளியேறினர். அப்படி வெளியேறியவர்களுள் இவரும் ஒருவர். இந்த நிலையில் ஆப்கானில் உள்ள மற்ற பெண் நீதிபதிகளையும் மீட்கும் முயற்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் இரண்டு ஆப்கான் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளை தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னங்க மாத்தி மாத்தி பேசுறாங்க.. திடீரென ‘அந்தர் பல்டி’ அடித்த தாலிபான்.. ‘மெல்ல வெளிவரும் சுயரூபம்’.. மறைமுகமாக இந்தியாவுக்கு எச்சரிக்கை..?
- ஆப்கான் விவகாரம்.. இவ்வளவு பிரச்சனைக்கும் டிரம்ப் அன்னைக்கு போட்ட அந்த ‘ஒப்பந்தம்’ தான் காரணம்.. பரபரப்பை கிளப்பிய பைடன்..!
- வெற்றி கொண்டாட்டத்தின் போது... எதிர்பாராத அசம்பாவிதம்!.. நிலைகுலைந்து போன தாலிபான்கள்!
- 'அமெரிக்கா விட்டுட்டு போன... எல்லா ராணுவ ஐட்டங்களையும் வெளிய எடுங்க டா'!.. தாலிபான்கள் 'அத' வச்சு என்ன பண்றாங்க தெரியுமா?
- நீங்க மட்டும் 'உம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க... 'எடுத்துட்டு போய் பொளந்துருவோம்...' 'இதான் சரியான டைம்...' - நம்ம ஆளுங்க யாரும் அங்க இல்ல...!
- யாருக்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது..! கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் என கூட்டம் கூட்டமாக செல்லும் ஆப்கான் மக்கள்.. நெஞ்சை ரணமாக்கும் காட்சி..!
- அம்மாடியோவ்..! இவ்வளத்தையுமா அமெரிக்கா விட்டுட்டு போய்ட்டாங்க.. ‘தலைசுற்ற வைக்கும் மதிப்பு’.. பீதியில் உலக நாடுகள்..!
- மொத்த ‘அமெரிக்க’ படை வெளியேறினதும்... வேகவேகமாக ‘காபூல்’ விமான நிலையத்தில் குவிந்த தாலிபான்கள்.. உலக நாடுகளுக்கு சொன்ன ‘முக்கிய’ செய்தி..!
- ஓவரா ஆடுறாங்க...! அவங்க மெயின் 'சுவிட்ச்'லையே கை வைப்போம்...! - 'பஞ்சஷேர்' போராளிகளை 'அடக்க' தாலிபான்கள் போட்ட ராஜதந்திரம்...!
- 'அது தீவிரவாதிகளோட வண்டி தான்'!.. கண் இமைக்கும் நேரத்தில்... சாம்பலாக்கிய அமெரிக்க ராணுவம்!.. பக்கத்தில போய் பார்த்தா... குலை நடுங்கவைக்கும் ட்விஸ்ட்!