'Night 1 மணி இருக்கும், என் பெட் பக்கத்துல'... 'இத சொல்றதுக்கு கூட தைரியம் இல்ல'... 'தாலிபான்கள் இவ்வளவு கொடூரமானவர்களா'?... இந்தியாவுக்கு தப்பி வந்த பெண் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குத் தப்பி வந்த பெண் வெளியிட்டுள்ள தகவல் தாலிபான்களின் கோர முகத்தைக் காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற ஆரம்பித்ததிலிருந்து தாலிபான்களின் கொடூர முகம் வெளிப்பட ஆரம்பித்து விட்டது. இதனால் அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனிடையே தாலிபான்கள் 20 வருடங்களுக்கு முன்பு ஆட்சியிலிருந்த நேரத்தில் அங்கிருந்து தப்பி வந்தவர் தான்  Fariba Akemi. அவர் தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார்.

இவர் தாலிபான்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். Fariba 14 வயதாக இருக்கும் போது, அவருக்கும் Faribaவை விட 20 வயது அதிகமுள்ள நபருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. Faribaவின் பெற்றோர் நிதி நெருக்கடி காரணமாக அவரை திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். ஆனால் அந்த நபரின் உண்மையான முகம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

Faribaவுக்கு திருமணம் முடிந்த பின்னர் அவரால் படிக்க முடியாமல் போனது. அதோடு தினமும் அவரது கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென Faribaவை கட்டிலிலிருந்து கீழே மிதித்துத் தள்ளி அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த சூழ்நிலையில் அவருக்கு 4 மகள்கள் பிறந்தனர்.

வாழ்க்கை இப்படி நரகம் ஆகிவிட்டதே என வாழ்ந்து வந்த நிலையில், மூத்தமகளைக் கடன் சுமை காரணமாக அவரின் கணவர் தாலிபான்களுக்கு விற்றுள்ளார். போதைப் பொருள் வியாபாரத்தில் Faribaவின் கணவர் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களது இரண்டாவது மகளையும் தாலிபான்களுக்கு அவரது கணவர் விற்றுள்ளார். இதனால் விரக்தியின் உச்சிக்குச் சென்ற Fariba, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிப்பேன் எனச் சண்டை போட்டுள்ளார்.

அதற்குப் போன மகள்களைப் பற்றிக் கவலைப்பட்டால் இன்னும் இருக்கும் 2 மகள்களையும் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து மீண்டும் இரண்டு மகள்களை அவர் விற்க முடிவு செய்ததால், உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் Fariba  தெரிவிக்க, அவரின் கணவர் அந்த நகரத்தை விட்டுத் தப்பி ஓடியுள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தாலிபான் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

அப்போது தான் தனக்கு நடந்த கொடுமைகளை யோசித்துப் பார்த்த Fariba, தாலிபான்கள் மனிதர்களே இல்லை, என்ற முடிவுக்கு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் Faribaவுக்கு தாலிபான்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில், ''உனது மூன்றாவது மகளும் எங்களுக்கு வேண்டும்'' எனத் தாலிபான்கள் கூறியுள்ளார்கள். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதற்கு மேல் இங்கு இருந்தால் நாம் உயிருடன் இருக்க முடியாது என ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

தொடர்ந்து தாலிபான்கள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியபடி இருந்துள்ளனர். இதையடுத்து அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதை அறிந்து கோபத்தின் உச்சிக்கே சென்ற தாலிபான்கள் Fariba இரண்டு மகளுடன் தப்பியதால் அவருக்கு மரண தண்டனை அறிவித்தனர்.

தற்போது இந்தியாவில் இருக்கும் அவர், ஆப்கானில் இருக்கும் இரண்டு மகள்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியாத காரணத்தினால், மிகுந்த வேதனையுடன் நாட்களைக் கடத்தி வருகிறார். இதனால் தான் நான் சொல்கிறேன், ''தற்போது தாலிபான்கள் கொடுத்துள்ள வாக்குறுதியை நம்பாதீர்கள், அவர்கள் மனிதர்களே கிடையாது'' என அடித்துச் சொல்கிறார் Fariba.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்