நாங்க 'யாரு'னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சுப்பீங்க...! இந்த மாதிரி 'வேலை'லாம் இங்க வேணாம், சரியா...? - இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட வேண்டாம் என்று தாலிபானின் முக்கிய தலைவர் ஷஹாபுதீன் தில்வார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காபூலில் ரேடியோ பாகிஸ்தான் நிருபரிடம் ஷஹாபுதீன் தில்வார் பேசியபோது, 'தாலிபான்கள் அரசாங்கம் தொடர்பான விசயங்களை மிகவும் சிறப்பாக நடத்த முடியும் என்பதை இந்தியா கூடிய சீக்கிரம் அறிந்துக் கொள்ளும்' என்று கூறியுள்ளார்.

மேலும், 'ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் தேவை இல்லாமல் இந்தியா மூக்கை நுழைப்பது இந்தியாவிற்கு நல்லதல்ல' என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளித்துள்ளது. அகதிகளின் நலனுக்காக பாகிஸ்தான் ஆற்றும் சேவைகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தாலிபான்கள் பரஸ்பர மரியாதை அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் அமைதியான உறவையே விரும்புகிறோம்' இவ்வாறு ஷஹாபுதீன் தில்வார் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்