'இந்த பருப்பு எங்க கிட்ட வேகாது'...'உங்களுக்கு டெட்லைன் ஆகஸ்ட் 31'... அமெரிக்காவுக்கு முதல் அடியை கொடுத்த 'தாலிபான்கள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்இதுவரை அமெரிக்கா குறித்து எதுவும் பேசாத தாலிபான்கள் முதல் முறையாக அந்த நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ளும் முடிவை அமெரிக்கா எடுத்த நேரத்திலிருந்து அங்குத் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
கையேடு அங்கு ஆட்சி அமைக்கும் பணிகளில் தாலிபான்கள் வேகமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள தத்தம் நாட்டவரை மீட்கும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா எனப் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. காபூல் விமானநிலையம் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி என மேற்கத்திய நாடுகளின் படைகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் விரைவில் அவர்கள் தங்கள் நாட்டவரை வெளியேற்றிவிட்டு நாட்டைவிட்டு முழுமையாக வெளியேறுமாறு தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமெரிக்க, பிரிட்டன் படையினர் மீட்புப் பணிகள் பெயரில் இன்னும் கொஞ்சம் நாள் ஆப்கானில் இருக்க எடுக்கும் முயற்சியை நாங்கள் அறிவோம். தாலிபான்களைப் பொறுத்தவரை இது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும்.
சொன்னபடி திரும்பச் செல்லவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும். தாலிபான்கள் எதற்கும் தயாரானவர்கள்'' என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைத்துப் படைகளும் வெளியேறிவிடும் இன்று ஏற்கெனவே மேற்கத்திய நாடுகள் கூறியிருந்த நிலையில் தற்போது அதை மேலும் நீட்டிக்க ஜி7 நாடுகளின் தலைவர்கள் முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை அமெரிக்கா குறித்து எதுவும் பேசாத தாலிபான்கள் முதல் முறையாக அமெரிக்காவுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இத படிக்கும்போது நீங்க சந்தோசமா இருப்பீங்க'... 'ஆனா, என்னோட நிலைமை எந்த பொண்ணுக்கும் வர கூடாது'... இளம் பெண் விமானி சொன்ன அதிர்ச்சி தகவல்!
- 'இருக்குற பிரச்சினை போதாதுனு... யார்ரா நீங்க புதுசா'?.. காபூல் விமான நிலையத்தில் திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு!.. மறுபடியும் முதல்ல இருந்தா!?
- ஆகஸ்ட் 31-க்கு அப்புறம் 'யாராச்சும்' கண்ணுல மாட்டுங்க...! 'அப்புறம் இருக்கு உங்களுக்கு...' 'எங்கள பத்தி தெரியும்ல...' தாலிபான்கள் கடும் எச்சரிக்கை...!
- 'கதவு லென்ஸ் வழியா பாத்தேன்'... 'என் வீட்டு வாசலில் தாலிபான்கள் செய்த சம்பவம்'... உயிரை கையில் பிடித்து கொண்டு மாணவி வெளியிட்ட வீடியோ!
- கவலைப்படாத மகனே...! அம்மா 'அங்க' இருந்து தப்பிச்சிட்டேன்டா...! 'ஆப்கானில் இருந்து கிளம்பிய அம்மா...' - 'நடுவானில்' நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்...!
- தாலிபான்களிடம் இருந்து தப்பித்து... பாதுகாப்பாக இந்தியா வந்த மகிழ்ச்சி!.. மூச்சுமுட்ட பச்சிளம் குழந்தைக்கு முத்தம் கொடுத்த சிறுமி!
- தாலிபான்கள் கிரிக்கெட்டுக்கு எதிரியா..? நண்பனா..? ‘இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்’.. தாலிபான் ஆட்சியின் கீழ் ‘முதல்’ அதிரடி.. ..!
- பார்க்க 'அப்படியே' அச்சு அசலா 'ஸ்மித்' மாதிரியே இருக்காரு...! 'ஆப்கான்'ல அவருக்கு என்ன வேலை...? 'ஆச்சரியத்தில் ரசிகர்கள்...' - வைரலாகும் ஃபோட்டோ...!
- 'இங்க வராதீங்க'!.. ஆப்கான் அகதிகளுக்கு "NO" சொல்லும் அண்டை நாடுகள்!.. அதுக்காக இப்படியா செய்றது?.. அதிர்ச்சி சம்பவம்!
- 'அழாத டா தங்கம்!.. உனக்கு நான் இருக்கேன்!'.. காபூல் விமான நிலையத்தில்... பெற்றோரைப் பிரிந்த குழந்தை!.. தாயாக மாறிய அயல் நாட்டு ராணுவ வீராங்கனை!