'ஒரே செகண்ட்ல என் அதிகாரம், அந்தஸ்து எல்லாமே போச்சு...' 'திடீர்னு ஆபீஸ் உள்ள வந்தாங்க...' 'அப்படி' சொன்னதும் என் நெஞ்சே 'வெடிச்சு' போச்சு...! - யார் இந்த ஹக்கானிகள்...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரியை பதவியில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் உலகளவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கும் நிலையில் பல புதிய கட்டுப்பாடுகளை தினமும் அறிவித்து வருகிறது. இதற்கு முந்தைய ஆட்சிக்காலத்தில் சினிமா, விளையாட்டு போன்ற எந்த ஒரு கேளிக்கைக்கும் அனுமதி கிடையாது.

இதன் காரணமாகவே அங்கிருக்கும் மக்கள் தாலிபான் ஆட்சிக்கு பயந்து பல நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி ஹமீது ஷின்வாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி ஹமீது, 'தாலிபான்களின் கூட்டாளிகள் தான் ஹக்கானிகள். இந்த அமைப்பைச் சேர்ந்த அனாஸ் ஹக்கானி கிரிக்கெட் வாரியத்துக்கு வந்திருந்தார்.

அப்போது அவர் என்னிடம் வந்து இனிமேல் நீங்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி இல்லை எனக் கூறினார்' என பதிவிட்டுள்ளார்.

அதோடு, சில மணி நேரத்திலேயே ஹமீது அவர்களின் பேஸ்புக் பதிவு அழிக்கப்பட்டதோடு, அந்த பேஸ்புக் பக்கமே முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இனி நஸீபுல்லா ஹக்கானி என்ற நஸீப் கான் நியமிக்கப்படுவதாக ஹக்கானி குழுமம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்