அல்கொய்தா தலைவர் உயிரிழந்த விவகாரம்.. ஆப்கான் அதிகாரி சொன்ன தகவல்? பரபரப்பில் உலக நாடுகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்த அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க வீரர்களால் கொல்லப்பட்ட நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் தற்போது வெளியிட்டிருக்கும் கருத்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | திடீர்னு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அதிகாரி.. 9 நாளா நடந்த தேடுதல் வேட்டை.. கடைசியில கிடைச்ச தகவலால் திகைச்சுப்போன குடும்பத்தினர்..!

அய்மான் அல் ஜவாஹிரி

உலகையே ஸ்தம்பிக்க செய்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு ஒசாமா பின் லேடனுக்கு உதவியாக இருந்தவர் அல் ஜவாஹிரி என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே, பின்னாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்கா படைகளை குவிக்க முக்கிய காரணமாகவும் அமைந்தது. இந்த நாட்களில் அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு பக்கபலமாக அல் ஜவாஹிரி இருந்ததாக கூறப்படுகிறது.

அதிரடி தாக்குதல் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படையினரால்
பின்லேடன் கொல்லப்பட்டார். அப்போது, அல்கொய்தாவின் தலைவரானார் அய்மான் அல் ஜவாஹிரி. அதுமுதல் அவரை கண்டறிய பல ரகசிய திட்டங்களை அமெரிக்க அரசு செயல்படுத்திவந்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த அல் ஜவாஹிரியின் வீட்டில் ட்ரான் தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. இதில் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

பிளான்

அல்கொய்தாவின் தலைவராக இருந்த அல் ஜவாஹிரி அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதனிடையே ஜவாஹிரி ஆப்கனிஸ்தானில் இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அவர் வசித்ததாக சொல்லப்பட்ட வீட்டை சிறப்புப்படை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து அவரது அன்றாட நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளன. அப்போதுதான் அய்மான் தினந்தோறும் காலையில் தனது வீட்டில் உள்ள பால்கனியில் இருந்தபடி செய்தித் தாள்களை வாசிக்கும் பழக்கம் உடையவர் என அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து, டிரோன் மூலமாக அந்த வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அய்மான் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

பரபரப்பு

இந்நிலையில், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித், இதுவரையில் அய்மான் அல் ஜவாஹிரியின் உடல் கிடைக்கவில்லை எனவும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடந்து சுமார் ஒருமாத காலம் கடந்திருக்கும் நிலையில், ஜவாஹிரியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தலிபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | 20 வருஷம் ஆச்சு.. இனிமே நம்மள யாரு தேடப்போறான்னு நெனச்சு வெளிநாட்டுல இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நபர்.. ஏர்போர்ட்லேயே போலீஸ் செஞ்ச சம்பவம்..!

TALIBAN, TALIBAN SPOKESPERSON, TALIBAN SPOKESPERSON STATEMENT, AYMAN AL ZAWAHIRI, அல்கொய்தா தலைவர், அய்மான் அல் ஜவாஹிரி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்