'ப்ளீஸ், நம்புங்க நாங்க ரொம்ப நல்லவங்க'... 'பெண்களும் எங்க ஆட்சியில் இருக்கலாம்'... முதல் செய்தியாளர் சந்திப்பில் நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள் என தாலிபான்கள் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு தாலிபான்கள் முதல் முறையாக நேற்று அதிகாரப்பூர்வமான செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கேமிராக்கள் முன்பாக தோன்றி பேசினார். அப்போது பேசிய அவர், "20 ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் நாட்டை விடுவித்துள்ளோம். வெளிநாட்டினரை வெளியே விரட்டியுள்ளோம். நாடு முழுமைக்கும் பெருமிதமான தருணம் இது.

அதேநேரத்தில் உலகம் எங்களை நம்பவேண்டும் என்று விரும்புகிறோம், நாங்கள் ஆப்கானிஸ்தானைப் பழிவாங்க விரும்பவில்லை, பதிலாக அனைத்து ஆப்கான் மக்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குகிறோம்" என அவர் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த அவர் "20 ஆண்டுகளுக்கு முன்போ, இப்போதோ எப்போதும் எங்கள் நாடு ஒரு முஸ்லிம் நாடு. ஆனால், அனுபவம், பக்குவம், பார்வை என்று வரும்போது இப்போதுள்ள எங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எங்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைகளிலும் வேறுபாடுகள் இருக்கும். இது ஒரு பரிணாம நடைமுறை" என்று அவர் கூறினார்.

இதனிடையே பெண்களின் உரிமை குறித்த கேள்விக்குப் பதிலளித்த தாலிபான்கள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு  உட்பட்டு, எங்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படும். பெண்கள் வேலை செய்யலாம், பள்ளிக்குச் செல்லலாம், பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் வேலை செய்யலாம் என்று கூறியுள்ளார். மேலும் பெண்கள் அரசாங்கத்தில் இணையவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்