பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் உச்சக்கட்ட மோதல்.. ‘இவங்கள முடக்கணும்னா இதுதான் ஒரே வழி’.. தாலிபான்களுக்கே ‘தண்ணி’ காட்டும் அமைப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்களுக்கும், வடக்கு கூட்டணி அமைப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனிடையே ஆப்கானில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாலிபான்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதில் ஆப்கானின் அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றிய தாலிபான்களால் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. அங்கு வடக்கு கூட்டணி என்ற அமைப்பு தாலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறது. இதனால் இரு அமைப்புகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் தாலிபான்களுக்கும், வடக்கு கூட்டணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் 350 தாலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு கூட்டணி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கு பழிவாங்கும் வகையில் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் தாலிபான்கள் இணைய சேவையை துண்டித்துள்ளனர். மேலும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் உள்ளூர் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தாலிபான்கள் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்குக்குள் நுழையலாம், ஆனால் உயிருடன் திரும்பி போக முடியாது என வடக்கு கூட்டணி எச்சரிக்கை செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்