பிடிச்சா 10 மில்லியன் டாலர்.. இதுவரை ஒரு போட்டோ கூட கிடையாது.. முதல் முறையா பொது நிகழ்ச்சியில் சிராஜுதீன் ஹக்கானி.. யாருப்பா இவரு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அது ஹக்கானி தானா? அவரா இது? இவை தான் ஆப்கானிஸ்தானில் நேற்று நடைபெற்ற காவல்துறை புதிய அதிகாரிகள் பணியில் இணையும் நிகழ்வில் அனைவரும் பேசியது. உண்மைதான். நிகழ்ச்சிக்கு முதன் முறையாக வந்திருந்தார் சிராஜுதீன் ஹக்கானி. அமெரிக்காவின் முதன்மை இலக்காக ஒருகாலத்தில் இருந்த ஹக்கானி எப்படி இருப்பார் என்பதே பலருக்கும் தெரியாது. கற்பனை பிம்பம் மட்டும் தான். நேற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் ஹக்கானி.

Advertising
>
Advertising

புகழ்பெற்ற ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவராக இருந்தவர் ஜலாலுதீன் ஹக்கானி. 1970 களில் முஜாஹிதீன்களுக்கு எதிரான போரில் இந்த நெட்வொர்க் கலந்துகொண்டது. இதற்கு அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ உதவிகளை வழங்கியது. அதன்பிறகு தாலிபான் பிரச்சினையில் அமெரிக்காவின் எதிரி லிஸ்டில் வந்து சேர்ந்தது இந்த ஹக்கானி நெட்வொர்க்.

நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாத அளவு தாக்குதலை நடத்தக்கூடிய இந்த நெட்வொர்க்கை தன்னுடைய நெருங்கிய அமைப்பாக கருதியது தாலிபான். அதன் காரணமாகவே, 2018 ஆம் ஆண்டு ஜலாலுதீன் ஹக்கானி மரணம் அடைந்த பிறகு சிராஜுதீன் ஹக்கானி தலைமை பொறுப்பிற்கு வந்தபோது தாலிபான் அதனை ஆதரித்தது.

இப்போது தாலிபான் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி தான். இவரைப்பற்றிய தெளிவான தகவல்கள் யாரிடத்திலும் இல்லை. ஏன் அமெரிக்கவிடமே ஹக்கானியின் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. முகத்தை மூடிக்கொண்டு அல்லது டிஜிட்டலாக முகத்தை மறைத்தே பொதுவெளியில் வீடியோ வெளியிடும் ஹக்கானி முதல் முறையாக நேற்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.

விழாவில் பேசிய ஹக்கானி," உங்களுடைய திருப்திக்கும், நம்பிக்கையை கட்டமைக்கும் விதமாக முதல்முறை பொது சந்திப்பிற்கு வந்துள்ளேன். இதன்மூலம் நாங்கள் தலைமை தன்மையை எவ்வாறு மதிக்கிறோம் என்பது உங்களுக்கு புலனாகலாம்" என்றார்.

10 மில்லியன் டாலர்

ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, தாலிபான்கள் கைப்பற்றினர். சுப்ரீம் கமேண்டரான ஹிபதுல்லா அஃகுன்ஸதா தலைமை பொறுப்பில் அமர்ந்தார். பல ஆண்டுகால தாலிபான் போரில், ஒருங்கிணைந்து செயல்பட்ட ஹக்கானி நெட்வொர்க்கை திருப்திப்படுத்தும் நோக்கில் சிராஜுதீனுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கியது தாலிபான் மேலிடம்.

கடந்த 20 வருடங்களில் பல கடுமையான தாக்குதலை ஹக்கானி நிகழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாக அவரை கைது செய்யும் விதத்தில் துப்பு கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை சன்மானமாக அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து இருந்தது.

போட்டா கூட கிடையாது

பொதுவாகவே தாலிபான் தலைவர் யாரும் பொது வெளியில் தங்களை அடையாளப்படுத்தமாட்டார்கள். அவ்வளவு ஏன் தாலிபானை தோற்றுவித்த முல்லா ஒமர் -ன் ஒரே புகைப்படத்தை மட்டுமே அமெரிக்காவால் சேகரிக்க முடிந்தது. தற்போதைய தாலிபான் தலைவர் ஹிபதுல்லா பொது இடத்திற்கு வராததன் காரணமாக அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கொஞ்ச காலத்திற்கு முன்னர் தீயாய் பரவியது. ஆனால், அடுத்த சில நாட்களில் ஹபதுல்லா பொது வெளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுவரையில் யாருக்குமே தெரிந்திராத சிராஜுதீன் ஹக்கானி முதன் முறையாக வெளியே வந்து பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

TALIBAN, SIRAJUDDINHAQQANI, தாலிபான், சிராஜுதீன்ஹக்கானி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்