'பயங்கர ஸ்பீடா இருக்காங்க...' மூணே மாசத்துல முடிச்சிடுவாங்க...! 'அமெரிக்க ராணுவம் வெளியிட்ட தகவல்...' - கவலையில் ஜோ பைடன்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானில் நடந்து வரும் தாலிபன் தாக்குதல் படையினர் 65% நாட்டை கைப்பற்றி வருவது அமெரிக்காவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசிற்கும், தாலிபன் தீவிரவாதிகளுக்கும் நடந்து வரும் போர் பல அப்பாவி மக்களின் உயிரை எடுத்து வருகிறது. மக்கள் உண்ண உணவில்லாமல், தங்க இருப்பிடம் இல்லாமல் குழந்தைகளையும், பெரியவர்களையும் வைத்து அவதியுற்று வருகின்றனர்.

மூன்றே மாதங்களில் தாலிபன்கள் ஆப்கான் தலைநகர்  காபூலை கைப்பற்றுவார்கள் என அமெரிக்க ராணுவம் கூறினாலும், அவர்கள் தாக்குதலை கணக்கில் கொண்டால் இன்னும் ஒரே மாதத்தில் இது நடந்து விடும் என்ற பலமான கருத்தும் நிலவுகிறது.

தற்போது வரை ஆப்கானிஸ்தானின் 65 சதவிகித பரப்பு தாலிபன் தாக்குதல் படையினரிடம் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழு படையினரையும் வாபஸ் பெறுவதில் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 6 நாட்களில் எட்டாவது நகரமாக  படாக்ஷானின் தலைநகர் ஃபைசாபாத்தை தாலிபன்கள் கைப்பற்றி உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்