பெண்கள், குழந்தைகளை தாலிபான்கள் எப்படி ‘யூஸ்’ பண்றாங்க தெரியுமா..? ‘பகீர்’ தகவலை வெளியிட்ட ஆப்கான் துணை அதிபர்.. என்ன நடக்கிறது அந்தராப் பள்ளத்தாக்கில்..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆப்கான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆப்கான் நாட்டின் சட்டப்படி அதிபர் நாட்டில் இல்லாத போது, துணை அதிபர்தான் அதிபராகச் செயல்பட முடியும். அந்த வகையில் ஆப்கான் துணை அதிபராக இருந்த அம்ருல்லா (Amrullah Saleh) சலே, தன்னை ஆப்கான் அதிபராக அறிவித்துக் கொண்டார். இந்த நிலையில், தாலிபான்கள் குறித்து அவர் பரபரப்பு ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், ‘தாலிபான்கள் அந்தராப் (Andarab) பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு உணவு மற்றும் எரிபொருளை அனுமதிக்கவில்லை. இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. இப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் மலைகளுக்கும், பள்ளத்தாக்கு பகுதிகளுக்கும் தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கடத்தும் தாலிபான்கள் ஒவ்வொரு வீடுகளையும் சோதனை செய்யும்போது, அவர்களை மனித கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்’ என அம்ருல்லா சலே பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ஆப்கான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள போதிலும், பஞ்ச்ஷிர் (Panjshir) பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பகுதிகளை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அங்கு தாலிபான்களுக்கு எதிராகப் போராளி குழுக்களை அகமது ஷா மசூது (Ahmad Shah Massoud) என்பவர் நடத்தி வருகிறார்.

இதனிடையே பஞ்ச்ஷிர் மாகாணத்தின் ஒரு பகுதியை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை முற்றிலுமாக மறுத்துள்ள அம்ருல்லா சலே, பஞ்ச்ஷிர் மாகாணம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது அம்ருல்லா சலே பஞ்ச்ஷிர் மாகாணத்தில்தான் உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக India Today ஊடகத்துக்கு அம்ருல்லா சலே அளித்த பேட்டியில், ‘பஞ்ச்ஷிர் மாகாணம் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளோம். பேச்சுவார்த்தை என்றால் சரணடைவது அல்லது தாலிபான் சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்வது என்று அர்த்தமல்ல. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையாக அது அமைய வேண்டும். பேச்சுவார்த்தைக்குத் தாலிபான்கள் உடன்படவில்லை என்றால் அவர்களுடன் சண்டையிடவும் தயாராக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்