'இது எதேச்சையாக நடக்குதா'... 'இல்ல பக்கா பிளான் பண்ணி பன்றாங்களா'?... 'ஏண்டா இப்படி டார்ச்சர் பண்றீங்க'... செம கடுப்பில் அமெரிக்கா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 2001,செப்டம்பர் 11 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த போதே தாலிபான்கள் ஆட்சிக்குப் பிரச்சினை வந்துவிட்டது.

அந்தத் தாக்குதலுக்குக் காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தாலிபான்கள் மீது அமெரிக்க ராணுவம் போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அகற்றியது. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி புதிய அரசியலமைப்புச் சட்டமும் நிறுவப்பட்டன.

ஆனால் தோல்வி கண்ட தாலிபான்கள் மெல்ல தங்களைப் பலப்படுத்திக் கொண்டனர், 20 ஆண்டுகள் தாலிபான்களுக்கும், அமெரிக்க, நேட்டோ, ஆப்கான் அரசுப் படைகளுக்கும் இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள், லட்சக்கணக்கில் காயமடைந்தனர்.

இறுதிவரை அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்காததால், கடந்த மாதம் 31-ம் தேதியோடு ஆப்கானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறின. தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கான் முழுமையாக வந்தது. ஆப்கானில் தாலிபான் தீவிரவாதிகள் தலைமையில் விரைவில் புதிய அரசு அமையும் எனக் தாலிபான்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமராக முல்லாஹ் ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மௌலவி அப்துல் சலாம் ஹனாபி நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு நாளான செப்டம்பர் 11 அன்று, தாலிபான்கள் பதவியேற்பு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது அமெரிக்காவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு தாலிபான்களின் திட்டமிட்ட நிகழ்வா அல்லது எதேச்சையாக நடக்கும் ஒன்றா என்பது தான் சர்வதேச அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்