ஒரு 'இன்ச்' கூட நகர முடியாது...! அய்யோ... அப்போ அந்த மக்களோட கதி...? தப்பிச்சிடலாம்னு பார்த்தீங்களா...? - 'செக்' வைத்த தாலிபான்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் தாலிபான் படையினர் காபூல் விமான நிலையத்தை சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதப் படை, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலும் அமெரிக்க படைகள் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடலாம் என அறிவித்திருந்தது.

ஆப்கான் மக்களும், தாலிபான் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு தரைவழியாகவும், விமானம் மூலமாகவும் தப்பிச் சென்று வருகின்றனர்.

தற்போது பொதுமக்கள் பெரும்பாலானோர் காபூல் விமான நிலையம் வழியாக தப்பிச்செல்வதால் தாலிபான் அமைப்பு விமான நிலையத்திற்கு சீல் வைத்துள்ளது.

அதோடு, காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை தாலிபான்கள் தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்பே தப்பி செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் மக்கள், விமான நிலையத்தை சுற்றியுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். விமானம் கிடைக்காத மக்கள் பலர் தரை வழியாக பாகிஸ்தானில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

மக்களை வெளியேற்ற அமெரிக்க படைகளுக்கு இன்னும் 2 நாட்கள் காலவகாசம் இருக்கும் நிலையில் தாலிபான் செய்துள்ள இந்த செயல், உலகளவில் மேலும் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையின்மையை உறுதி செய்வதாக உள்ளது.

மேலும், காபூல் விமான நிலையத்தில் வெகு விரைவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்