எப்படி 'இந்த இடத்த' மறக்க முடியும்...! ஒருகாலத்துல 'என்னெல்லாம்' நடந்த இடம் தெரியுமா...? 'மொத தடவையா பயம் இல்லாம இங்க வந்துருக்கேன்...' - நெகிழும் தாலிபான்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள புல் இ-சர்கி சிறைச்சாலையை தாலிபான் கமாண்டர்கள் பார்வையிட்டு சென்றனர்.

இந்தச் சிறைச்சாலையில் கடந்த ஆட்சியின்போது தாலிபான்கள், போதைப் பொருள் கடத்தல் மாபியாக்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், தற்போது இந்த சிறைச்சாலையைக் கைப்பற்றிய தாலிபான்கள் எல்லா குற்றவாளிகளையும் விடுவித்தனர். அங்கிருந்த அரசுக் காவலர்களும் உடனடியாக வெளியேறினர். தற்போது அங்கு போதைப் பொருள் கடத்தல்காரர்களில் வெகுசிலர் மட்டும் தண்டனையில் உள்ளனர்.

இந்த நிலையில், சிறைச்சாலையை தன்னுடைய நண்பர்களுடன் பார்வையிட்ட தாலிபான் கமாண்டர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அப்போது, 'நான் இந்தச் சிறையில் 14 மாதங்கள் தண்டனை அனுபவித்தேன். என் வாழ்வின் மோசமான நாட்கள் அவை. இந்தச் சிறையில் வாய்விட்டு சொல்ல முடியாத அளவிற்கு கொடூரங்கள் நடக்கும். இப்போது முதல்தடவையாக நான் இந்த சிறைக்கு பயம் இல்லாமல் வந்துள்ளேன்' என்று கூறினார்.

தாலிபான்களில் ஒருவர் கைதிகள் விட்டுச் சென்ற பளுதூக்குதல் கருவியை தூக்கிப் பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், இந்தச் சிறைச்சாலையில் 5,000 பேர் தான் இருக்க முடியும் ஆனால், கடந்த ஆட்சியின் போது 10,000 பேர் அடைக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவ்வப்போது மனித உரிமை மீறல் நடந்து வந்ததாக சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்