'பெண் நிருபர் கேட்ட சீரியஸான கேள்வி'!.. பேட்டிக்கு நடுவே ஒளிப்பதிவை நிறுத்தச் சொல்லி... விழுந்து விழுந்து சிரித்த தாலிபான்கள்!.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்களிடம் பெண் நிருபர் கேட்ட ஒற்றை கேள்வியால், அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்களின் தலைவர் தங்களுடைய முதல் செய்தியாளர்கள் சந்திப்பில், "பெண்கள் சமூகத்தில் செயல்பூர்வமாக இருப்பார்கள். ஆனால் இஸ்லாமியம் என்ன கூறுகிறதோ அந்த சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுதான்" என்று தெரிவித்தார்.

ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தாலிபான்களின் இந்த அறிவிப்பு அங்குள்ள பெண்களுக்கு சிறு நம்பிக்கையை அளித்துள்ளது.

இந்நிலையில், பெண் பத்திரிகை நிருபர் ஒருவர் தாலிபான்களை பேட்டி எடுத்த ஒரு பழைய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அதில், அந்த பெண் நிருபர் தாலிபான்கள் பெண்களுக்கு உரிமையளிப்பார்களா என்று கேட்ட போது, "இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் பெண்ணுரிமை காக்கப்படும்" என்றனர்.

பிறகு அதே பெண் பத்திரிகை நிருபர், "பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்துக்கு ஆப்கன் மக்கள் அனுப்புவார்களா" என்று கேட்ட போது, சிரிப்பில் ஆழ்ந்த தாலிபான்கள், படம்பிடிப்பதை நிறுத்து என்றனர்.

மேலும், அதில் ஒரு தாலிபான் "இந்த நிருபர் கேட்கும் கேள்வி சிரிப்பை வரவழைக்கிறது" என்று நக்கலாக கூறி சிரித்ததும் பதிவாகியுள்ளது.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்