'உலகத்தோட எல்லா தொடர்பும் முடிந்தது'... 'புகைப்படத்துடன் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு'... துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் கொண்டாட்டம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாங்கள் முழு சுதந்திரம் அடைந்து விட்டதாகத் தாலிபான்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்த நேரத்திலிருந்து அந்நாடு தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வர தொடங்கியது. இந்நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை முழுமையாக வெளியேறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் இந்திய நேரப்படி அதிகாலை சுமார் ஒரு மணிக்குப் புறப்பட்டதாக அமெரிக்க ராணுவ ஜெனரல் கென்னத் மெக்கென்ஸி அறிவித்துள்ளார். இந்த விமானத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகளின் தலைவரும், அமெரிக்கத் தூதரும் கடைசி நபர்களாக விமானத்தில் ஏறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப்படைகள் நாட்டை விட்டு வெளியேறியதை தாலிபான்களின் செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க ராணுவ விமானங்கள் வெளியேறியதைத் தொட்ர்ந்து காபூலின் பல பகுதிகளிலும் தாலிபான்கள் துப்பாக்கிகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக தாலிபான்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகிறார்கள்.

முன்னதாக ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி அமெரிக்க வீரர் வெளியேறிய புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதனிடையே ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அங்கு தாலிபான்கள் ஆட்சியைச் சுலபமாகக் கைப்பற்றினர்.

இருப்பினும் அமெரிக்கப்படைகள் அறிவித்தபடி வெளியேறும் என பைடன் கூறியிருந்தார். தற்போது அறிவிக்கப்பட்ட கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளன. அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், இனிமேல் ஆப்கானுக்கும், இந்த உலகத்திற்கும் எந்த வித தொடர்பும் இருக்கப் போவதில்லை என பலரும் ட்விட்டரில் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்