'பெண்களுக்கு மட்டும் இல்ல, இனிமேல் ஆண்களுக்கும் சோதனை தான்'... 'இது போல ஐடியாலாம் யாருடா கொடுக்குறா'... பீதியை கிளப்பியுள்ள தாலிபான்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான்கள் தினம் தினம் புதிய அறிவிப்புகளால் பீதியைக் கிளப்பி வருகிறார்கள்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், இனிமேல் தங்கள் வாழ்வாதாரம், தொழில் என்னவாகும் என்பது ஆப்கான் மக்களின் பெரும் கவலையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை தூங்கி எழும்பும் போதும் இன்றைய நாள் எப்படி இருக்குமோ, தாலிபான்கள் என்ன அறிவிப்பை வெளியிடுவார்களோ என மக்கள் பலரும் புலம்பி வருகிறார்கள்.

அந்த வகையில் இனிமேல் ஆண்கள் ஷேவ் செய்யக் கூடாது என்ற அதிரடி தடையை விதித்துள்ளார்கள். ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மண்டில் உள்ள தாலிபான்கள், தங்கள் மாகாணத்தில் முடி திருத்தும் கடைகளில் ஆண்கள் தாடியை ஷேவ் செய்யத் தடை விதித்துள்ளார்கள். ஹெல்மண்ட் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குநர் Hafez Rashid Helmandi இந்த தடை உத்தரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே தடை உத்தரவு ஹெல்மண்ட் மாகாணத்தில் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் முழுவதும் அமல்படுத்தப்படும் என Hafez Rashid Helmandi குறிப்பிட்டுள்ளார். கடந்த 1995-2001ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சிக் காலத்தில் மக்களின் உரிமைகள் எப்படிப் பறிக்கப்பட்டதோ அதுபோன்ற சூழ்நிலை மீண்டும் திரும்பியுள்ளதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஷாரியத் சட்டப்படியே ஆட்சி நடக்கும் எனத் தெரிவித்த தாலிபான்கள், நாங்கள் முன்பு போல் இல்லை மாறிவிட்டோம் என அடித்துக் கூறினார்கள். ஆனால் ஆப்கானில் தினம் தினம் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது தாலிபான்கள் தங்களின் அடக்குமுறைகளை மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்