'அமெரிக்க ராணுவ சிறையில்... நரக வேதனை அனுபவித்த கைதி!.. உச்சபட்ட அங்கீகாரம் கொடுத்து... அழகு பார்க்கும் தாலிபான்கள்'!.. உலக நாடுகள் ஷாக்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் ராணுவ சிறையில் அல்லற்பட்டுக் கொண்டிருந்த கைதி ஒருவருக்கு தாலிபான்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்திருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் ஆகஸ்டு 31ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என தாலிபான்கள் காலக்கெடு விதித்துள்ள நிலையில், அதன் பிறகு தான் புதிய ஆட்சி அமையும் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய நிதி அமைச்சர், உளவுத்துறை தலைவர் மற்றும் உள்விவகார அமைச்சர் உள்ளிட்டோரை தாலிபான்கள் நியமித்துள்ளனர்.

Gul Agha என்பவர் நிதியமைச்சராகவும், Sadr Ibrahim என்பவர் செயல் உள்விவகார அமைச்சராகவும், Najibullah உளவுத்துறை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முல்லா ஷிரின் காபூல் ஆளுநராகவும், ஹம்துல்லா நோமானி தலைநகரின் மேயராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் குவாண்டனமோ இராணுவ சிறையில் இருந்து மீண்ட Abdul Qayyum Zakir என்பவரை தாலிபான் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருப்பார் என அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ராணுவ சிறையில் சித்தரவதை அனுபவித்த கைதி ஒருவர், தாலிபான்கள் அரசின் பாதுகாப்பு அமைச்சராக நியமக்கப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்