'அங்க' வச்சு என்ன 'பேசினோம்'னு மறந்துட்டீங்க இல்ல...? 'இதெல்லாம்' நல்லாவா இருக்கு...? - தாலிபான்கள் கடும் கண்டனம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானியை அமெரிக்கா தீவிரவாதி பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும் என தாலிபான்கள் கூறி வருகின்றனர்.

ஆப்கானை முழுவதுமாக கைப்பற்றிய தாலிபான் 33 ஆண்கள் மட்டும் கொண்ட ஒரு அமைச்சரவையை பரிந்துரைத்துள்ளது. அதில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் உள்துறை அமைச்சர் பதவியை சிராஜுதீன் ஹக்கானி என்பவருக்கு தாலிபான் அரசு வழங்கியுள்ளது.

அமெரிக்க படைகள் மீது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சிராஜுதீன் ஹக்கானி தாக்குதல்களை நடத்தி வந்தார். இதன் காரணமாக FBI ஹக்கானியை தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவரின் தலைக்கு சுமார் 37 கோடி ரூபாய் பரிசும் அமெரிக்கா அறிவித்திருந்தது. அதோடு சிராஜுதீன் ஹக்கானி மட்டுமல்லாமல் ஆப்கானில் தற்போது அமைச்சரவையில் பதவி ஏற்கவிருக்கும தாலிபபான்களில் பல கேபினட் அமைச்சர்களை அமெரிக்கா தனது கறுப்புப்பட்டியலில் வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போதிலும், ஹக்கானியை அமெரிக்கா இன்னும் தீவிரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ளதாக தாலிபன்கள் குறை கூறி உள்ளனர். இது தோஹாவில் அமெரிக்காவும் தாங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் இருப்பதாவும் கூறிவருகிறது

அமெரிக்கா மீதான இந்த கண்டன அறிக்கை, காபூலில் இருந்து அமெரிக்கர்கள் உள்ளிட்ட 200 பேருடன் முதலாவது சர்வதேச பயணிகள் விமானம் கத்தாருக்கு புறப்படும் சில மணி நேரங்களுக்கு முன்னர், ஆப்கன் அரசு சார்பில், வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்