உக்ரைன்-ரஷ்யா போரால் உலகமே பதற்றத்துல இருக்கு.. இந்த நேரத்துல சீனா பார்த்த வேலை.. பக்கத்து நாடு பரபரப்பு குற்றச்சாட்டு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சீனா செய்த செயல் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

"கேக்க மாட்டீங்க".. மாணவர்களின் செல்போன்களை நெருப்பில் பொசுக்கிய ஆசிரியர்.. காட்டுத்தீயாக பரவும் வீடியோ..!

சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது. அதனால், தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்றும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இதனிடையே, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வழி, கடல்வழி என உக்ரைன் மீது ரஷ்யா மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனால்  மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் சீனாவின் போர் விமானங்கள் திடீரென தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. சீனாவின் விமானப்படைக்கு சொந்தமான 9 ஜே-16 ரக போர் விமானங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தென் சீன கடலின் பிரடாஸ் தீவின் வான்பரப்பில் நுழைந்ததாக தைவான் அரசு தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டின் வான் பரப்பிற்குள் நுழைந்த சீன போர் விமானங்கள் சிறிது நேரத்தில் வான் பரப்பை விட்டு விலகி சென்றதாகவும் தைவான் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரால் மூன்றாம் உலகப்போர் அச்சம் நிலவி வரும் நிலையில், சீனாவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"போர்ல எங்களோட நிக்க யாருமே இல்ல.. தனியா நிக்குறோம்!".. உக்ரைன் அதிபரின்‌ நெஞ்சை பிழியும் பேச்சு

TAIWAN, CHINESE AIRCRAFT, AIR DEFENCE ZONE, உக்ரைன்-ரஷ்யா போர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்