2025-ல 'நம்ம' நாடு இருக்காது...! 'போற போக்க பார்த்தா அப்படி தான் தெரியுது...' 'அவங்க முடிவு பண்ணிட்டாங்க...' 'என்ன' செய்ய போறோம்...? - கலங்கும் நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனா மற்றும் தைவான் இடையே கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு பதற்றம் நிலவுவதாக தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (01-10-2021) அன்று ஆரம்பித்து 4 நாட்களில் சுமார் 150 முறை சீன போர் விமானங்கள் தைவானின் வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததாக  ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். தைவான் தன்னை ஒரு சுயாட்சி நாடாகதான் நினைக்கிறது. ஆனால், சீனாவோ தைவானை தனது நாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே பார்த்து வருகிறது.

வலுக்கட்டாயமாக தைவானை தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சியை சீனா நிராகரிக்கவில்லை. தைவானின் வான் பாதுகாப்பு மண்டலம், தைவான் ஜலசந்தி மற்றும் சீன பெருநிலப்பரப்பின் ஒரு பெரும் பகுதியை அடக்கியுள்ளது. சீனா மற்றும் தைவானுக்கு இடையே உள்ள அதிகாரபூர்வற்ற எல்லையை கடப்பதை தைவான் பெரும் அச்சுறுத்தலாக தான் பார்க்கிறது.

தைவானை சீனா 2025-ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக கைப்பற்றி இருக்ககும் என்றும் தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுகோ செங் கூறிள்ளார். அவர் தைபேயில் நடைபெற்ற நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் பேசினார். அப்போது வலுவான ஏவுகணைகள் அடங்கிய ஒரு போர்க்கப்பலை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தைவான், சீனாவுக்கு உட்பட்ட பகுதி எனவும், தேவைப்பட்டால் பலத்தை பயன்படுத்தி கைபற்றப்படும் எனவும் சீனா தொடர்ந்து சொல்லி வந்தாலும் தங்கள் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பறிகொடுக்க போவதில்லை என தைவான் பதிலடி கொடுத்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்