ஆசியாவிலேயே பர்ஸ்ட் டைம் இங்கதான் நிறைவேறியிருக்கு.. அழுது கொண்டாடிய சமூகத்தினர்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் கடந்த ஆண்டுதான் தன்பாலினச் சேர்க்கை உறவுக்கான தடைச்சட்டத்தை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆசியாவில் முதல்முறையாக தைவானில் தன்பாலின திருமணத்துக்கான மசோதாவுக்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு, தன்பாலின திருமணத்தை அந்நாடு அங்கீகரிக்க உத்தரவிட்டதை அடுத்து, தன்பாலின ஈர்ப்பாளர்களால் தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மே மாதம் 24-ஆம் தேதியில் இருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்றியதால், தைவான் LGBT சமூகத்தினர் இதனை தெருக்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். உலகின் பல மூலைகளிலும் தைவானின் இந்த வெற்றியை தன்பாலின ஈர்ப்பினை ஆதரிப்போர் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், உலகத்திலேயே அதிக தன்பாலின ஈர்ப்பாளர் விகிதம் தைவானில் அதிகம் உள்ளதாகவும், தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமையை வலியுறுத்தும் வகையில், பலதரப்பட்ட போராட்டங்களை வருடாருடாம் தைவானைச் சேர்ந்தவர்கள் முன்னெடுத்து வந்த நிலையில், அந்நாடு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது அங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்