எங்க 'விஷயத்துல' வந்து தேவை இல்லாம 'மூக்க' நுழைக்காதீங்க...! சண்டைய எப்படி 'டீல் பண்றது'ன்னு நாங்க பாத்துக்குறோம்...! - அமெரிக்காவிற்கு 'அட்வைஸ்' செய்த நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே நடைபெறும் சலசலப்பில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது சரியில்லை என தைவான் கூறியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த சில மாதங்களாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே ஒரு கோல்டு வார் நடந்து வருகிறது. சீனாவில் நடந்த உள்நாட்டு போரில் சீனப்பகுதியில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால், இதுவரை சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் என சொந்தம் கொண்டாடி வருகிறது.

அதோடு, சீனா தங்கள் படையினை தைவான் எல்லைப் பகுதிகளுக்குள் முன்பை விட அதிக அளவில் குவித்து வருகிறது.

சீனாவின் இந்த செயல் கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங்கும் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எந்த இரு நாட்டுக்குள் போர் பதற்றம் ஏற்படக்கூடும் என்று தெரிய வந்தால் அங்கு உடனடியாக அமெரிக்கா மூக்கை நுழைக்கும். அதுபோல சீனா தைவான் விஷயத்திலும் தைவானுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மட்டுமல்லாது கனடாவும் தைவானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தைவான் நீரிணைப் பகுதியில் தங்களது போா்க் கப்பல்களை செலுத்தியுள்ளன. ஆனால், தைவான் அரசோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தைவான் அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அமெரிக்க-சீன ஒப்பந்தங்களின் விதிகளை அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையிலான எந்தவொரு அதிகாரப்பூர்வ மற்றும் இராணுவ தொடர்புகளையும், சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்