"ஒரு நேரத்தில்.. ஒரே ஒருத்தர் மட்டும் சாப்பிடும் ஹோட்டல்!"... 'கொரோனாவுக்கு' எதிரான 'சமூக விலகலின்' உச்சகட்ட 'யோசனை'!.. 'தம்பதிக்கு' குவியும் 'பாராட்டுகள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.‌

ஸ்வீடன் நாட்டை பொருத்தவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3,300-ஐ தாண்டியுள்ளது. இந்த வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தனிமனித இடைவெளி, சமூக விலகல் உள்ளிட்டவற்றை பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவை விரட்டும் வகையில் சமூக விலகலை மையப்படுத்தி ஸ்வீடனில் இயங்கி வரும் ஹோட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆம் ஸ்வீடன் நாட்டில் “டேபிள் ஃபார் ஒன்” என்கிற பெயரில் இயங்கி வரும் ஹோட்டல் ஒன்று சமூக விலகலை கருத்தில்கொண்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் மேசை, நாற்காலி மட்டுமே போடப்பட்டிருக்கும். அதிலும் ஒரே ஒருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு சர்வர் யாரும் கிடையாது. கயிறு ஒன்றில் பிக்னிக் கூடை கட்டப்பட்டிருக்கும். அதில்தான் உணவு வைத்து மேசைக்கு அனுப்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களுக்கு இந்த சிறிய ஹோட்டல் ஒரு உதாரணம் என்று சொல்லலாம். இந்த ஹோட்டலை நடத்தும் ஸ்வீடனைச் சேர்ந்த தம்பதிதான் ரஸ்முஸ் பெர்சன், லின்டா கார்ல்சன். இது பற்றி பேசிய ரஸ்முஸ் பெர்சன், “இந்த ஹோட்டல் உருவானதற்கு முக்கிய காரணம் என் மனைவியின் பெற்றோர்தான். தினமும் அவர்களுக்கு ஜன்னல் வழியாக உணவு வழங்கியதன் விளைவாகவே இந்த யோசனை உருவானது. வாடிக்கையாளர்களும் தனிமையில் அமர்ந்து உணவு உண்பதை ரசிக்கின்றனர்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்