நிலநடுக்கம் நடுவே... உயிரிழந்ததாக பெட்டியில் வைக்கப்பட்ட நபர்.. இறுதி சடங்கு நடக்க போறப்போ காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஒரு அம்மாவுக்கு இதைவிட என்ன வேணும்?".. தமிழக கால்பந்தாட்ட வீராங்கனையின் உருக்கமான பதிவு!!..

துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் எல்லையில் இந்த நிலநடுக்கம் நடந்ததால், இரு நாடுகளுமே கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. தொடர்ந்து இது தொடர்பான மீட்புப் பணிகளும் நடந்து வரும் சூழலில், பலி எண்ணிக்கையும் சுமார் 40,000 வரை ஆகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு உதவி செய்ய பல நாடுகளும் முன்வந்துள்ளன. தொடர்ந்து வேகமாக மீட்புப்பணிகளும் நடைபெற்று வரும் சூழலில், அவ்வப்போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பல நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்கள் குறித்து நிறைய உருக்கமான தகவல்களும் இணையத்தில் அதிகம் வெளியாகியும் வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், தற்போது  இடிபாடுகளில் சிக்கிய நபர் ஒருவர் குறித்து வெளியாகி உள்ள தகவல், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே Ahmed al-Maghribi என்ற நபர் சிக்கி உயிரிழந்ததாக அவரது உடல் மீட்கப்பட்டிருந்தது. அவரது உறவினர்களும் அகமதை அடையாளம் கண்ட சூழலில், அவரது உடல் மருத்துவமனை ஒன்றில் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இதனையடுத்து, இரண்டு நாட்கள் கழித்து உறவினர்களிடம் அகமதின் உடல் பை ஒன்றில் வைத்து கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லும் போது தான் அனைவருக்கும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அதன்படி, இரண்டு நாட்கள் கழித்து அவரது உடலில் அசைவு தெரிந்ததாக கூறப்படும் நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர்.

மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவாதகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இறந்ததாக கருதப்பட்ட நபருக்கு திடீரென உயிர் இருப்பது தெரிந்த விஷயம் பலரையும் அதிர்ந்து போக வைத்துள்ளது.

Also Read | 26 கல்யாணம்.. 22 பேருடன் விவாகரத்து.. ஆனாலும் 60 வயது நபரின் தீராத விருப்பம்..

SYRIA, SYRIA MAN, EARTHQUAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்