'பாக்கெட் பாக்கெட்டாக சிக்கிய வயகரா மாத்திரைகள்'... 'சார், சார் அந்த ஸ்டிக்கரை கொஞ்சம் பாருங்க'... அதிர்ந்துபோன போலீசார்!
முகப்பு > செய்திகள் > உலகம்346 பாக்கெட் சட்டவிரோத வயாகரா மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினார்கள்.
சுவிட்சர்லாந்து முதலான 55 நாடுகள் இணைந்து, உலகம் முழுவதும் நடத்திய ஆபரேஷன் ஒன்றில், சுவிஸ் அதிகாரிகள் 695 பார்சல்களை சோதனையிட்டார்கள்.அவற்றில் சட்ட விரோத வயாகரா மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், ஒவ்வொரு பார்சலாக சோதனை செய்து வந்தனர்.
அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் எதேச்சையாக மாத்திரை கவரின் மீதிருந்த ஸ்டிக்கரை பார்த்தார். அப்போது தான் அவர்களுக்கு உண்மை என்னவென்பது புலப்பட்டது. சிக்கிய பாக்கெட்களில் பத்தில் ஒன்பதில் போலி வயாகரா மாத்திரைகள் இருப்பதைப் பார்த்த போலீசார் அதிர்ந்து போனார்கள்.
இந்த போலி மருந்துகளால் மக்களின் உடல் நலனுக்குப் பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே அவற்றின் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் பாக்கெட்டுக்குள் இல்லை, அல்லது தேவையான அளவை விடக் குறைவான மருந்து பாக்கெட்களில் அடைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆபரேஷனில் உலகம் முழுவதும் ஒன்பது மில்லியன் பாக்கெட்கள் போலி மற்றும் சட்டவிரோத மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 113,000 சட்டவிரோத இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போலி மாத்திரைகள் எந்த அளவுக்குப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாலியல் தொழிலாளியிடம் சென்றுவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய பலே வாடிக்கையாளர்!' - நீதிமன்றத்தின் ‘வேறலெவல்’ தீர்ப்பு.. ‘நெகிழ்ச்சியில்’ பாலியல் தொழிலாளர்கள்!
- “க்ளப்-க்கா வர்றீங்க?” - கல்வி நிறுவனங்கள் விதித்த தண்டனை. ‘மாணவியருக்கு ஆதரவாக’ கல்வித்துறை எடுத்த பரபரப்பு முடிவு!
- VIDEO: 'பணத்துல என்ன சார் சந்தோஷம் இருக்கு!?'... 'பார்க்க வர்றவங்க ஏதாச்சும் கொடுப்பாங்க!'... 'எனக்கு அதுவே போதும்!'... கோடீஸ்வர வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு... சிங்கத்துடன் கொஞ்சி விளையாடும் இளைஞர்!... பிரம்மிக்கவைக்கும் காரணம்!