'கொரோனா' தடுப்பு மருந்து 'ரெடி'... 'கெத்தாக' அறிவித்து 'ஆச்சரியப்படுத்திய நாடு...' 'எந்த நாடு தெரியுமா?...'
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் சூழலில் புதிதாக ஒரு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளனர்.
கொரோனாவுக்குன தடுப்பு மருந்தை தயாரிக்க உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், நைஜீரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி நைஜீரிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கோவிட்-19 ஆராய்ச்சி குழுவினர் கூட்டாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
கார்டியன் நைஜீரிய இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடிலேகே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு மற்றும் பயோ இன்பர்மேடிக்ஸ் பிரிவின் மெடிக்கல் வைராலஜி நிபுணர் டாக்டர் ஓலாடிபோ கோலவோலே கூறுகையில், எங்கள் விஞ்ஞானிகளால் ஆப்பிரிக்க மக்களின் நலனிற்காக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் ஆகும். இதற்காக மருத்துவ ஆணையத்திடன் இருந்து பல்வேறு ஒப்புதல்களை பெற வேண்டியுள்ளது" என்றார்.
இதேபோல் அடிலேகே பல்கலைக்கழக துணைவேந்தரும், பேராசிரியருமான சாலமன் அடிபோலாவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
"எங்கள் குழுவினரின் திறன்களை இவ்வுலகிற்கு காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுப்போம்" என்றார். மேலும் பிரிசியஸ் கார்னர்ஸ்டோன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜூலியஸ் ஓலோகே கூறுகையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது உண்மை தான் எனத் தெரிவித்தார்.
"இதனை பலமுறை பரிசோதனை செய்து பார்த்துள்ளோம். குறிப்பாக ஆப்பிரிக்க மக்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது" எனக் கூறியுள்ளார். "இருப்பினும் இனம் கடந்து அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது நிச்சயம் வேலை செய்யும். இந்த மருந்து போலி அல்ல. எங்கள் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி. இதற்காக ஏராளமான அறிவியல்ரீதியான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- யாரு கெத்துன்னு மோதி பாத்துடலாம்... 'இரவோடிரவாக' வைக்கப்பட்ட ஆப்பு... 'முப்படைகளும்' குவிக்கப்பட்டதால் மிரண்டு போன சீனா!
- யுனெஸ்கோ கடும் எச்சரிக்கை!.. கொரோனா தாக்கத்தால்... 'பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது!'.. பகீர் பின்னணி!
- 'பிளான்னா இது தான்யா பிளான்னு'... 'கல்யாணம் முடிஞ்ச கையேடு இளம் ஜோடி செஞ்ச காரியம்'... வாயடைத்துப் போன சொந்தக்காரர்கள்!
- கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 4-வது நாடு... ஆனாலும் 'இந்த' விஷயத்தில் இந்தியா தான் நம்பர் 1... 'இன்ப' அதிர்ச்சி கொடுத்த WHO!
- 'என்ன பாவம் செஞ்சோம்'... 'உனக்கு இரக்கமே இல்லையா'... 'இந்த தம்பிக்கு வயசு 22 தான்'... நெஞ்சை உடைக்கும் சோகம்!
- சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞரை ‘கிண்டல்’ செய்த நபர்.. நொடியில் நடந்த பயங்கரம்..!
- "மாஸ்க் போடலன்னா இதுதான் தண்டனை..." "பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு..." 'அதிபருக்கே' ஆட்டம் காட்டுன 'கோர்ட்...'
- 'ஒரே பிரசவத்தில் 3 பிஞ்சுகள்'... 'சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்த அப்பா'... 'நொடியில் இடியாய் வந்த செய்தி'... உலகம் கொடுத்த கொடூர தண்டனை!
- 'அடுத்த மாசம்' தான் அண்ணனோட 'ஆட்டமே இருக்கு...' "இனி லட்சத்துல பாப்பீங்க..." 'அதிர்ச்சிமேல்' அதிர்ச்சியளிக்கும் 'ஆய்வுத் தகவல்...'
- "உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!