"மொத்த உலகமும் தேடுன விஷயம்".. திகைச்சு நின்ன Google.. 25 ஆண்டுகளில் இல்லாத டிராபிக் - சுந்தர் பிச்சை!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கூகுள் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளில் இல்லாத டிராபிக், நேற்று இரவு ஏற்பட்டதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ள நிலையில், இதற்கான காரணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மைதானத்தில் கலங்கி நின்ற எம்பாப்பே.. ஓடி வந்து ஆறுதல் சொன்ன பிரான்ஸ் அதிபர்!!.. கால்பந்து ரசிகர்களை ஈர்த்த வீடியோ!!

நேற்று இரவு முதல் இந்த உலகமே கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விளையாட்டு கால்பந்து. இதன் உலக கோப்பை தொடர், கடந்த நவம்பர் மாதம் கத்தாரில் வைத்து ஆரம்பமாகி இருந்தது. அந்த நாள் முதல், இறுதி போட்டி நடந்து முடிந்த தினம் வரை உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் பரபரப்பாக தான் இருந்தனர்.

இதற்கு மத்தியில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகளும் இறுதி போட்டியில் தகுதி பெற்றிருந்தன. ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இறுதி போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறக்கும் வகையில் தான் அமைந்திருந்தது

முதல் பாதி முழுக்க அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தி இருந்த நிலையில், அந்த அணி 2 கோல்களையும் அடித்திருந்தது. இரண்டாவது பாதியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்வே, இரண்டு நிமிட இடைவெளியில் 2 கோல்களை அடித்து அர்ஜென்டினா அணிக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்திருந்தார். கூடுதல் நேரத்தின் முடிவில், 3 - 3 என்ற கணக்கில் சமனாக இருக்க, பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி, மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு உலக அளவில் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் சூழலில் கால்பந்து போட்டிகள் குறித்த செய்திகள் தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது.

மேலும் இந்த இறுதி போட்டியில், மெஸ்ஸி, எம்பாப்வே உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நிறைய சாதனைகளையும் செய்திருந்தனர். உலகமே இந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியை கவனித்து வந்த நிலையில், இது தொடர்பாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ள ட்வீட், அதிக வைரலாகி வருகிறது. இதுகுறித்து சுந்தர் பிச்சை பகிர்ந்த ட்வீட்டில், "கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில், அதிக டிராபிக் வந்தது கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டி நடந்த போது தான். ஒட்டுமொத்த உலகமே ஒரு விஷயத்தை மட்டும் தேடியது போல இருந்தது" என வியப்புடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து ரசிகர்கள் இல்லாமல், மற்ற பார்வையாளர்கள் கூட நேற்றைய போட்டியை அதிகம் கவனித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "இந்தியாவில் கால்பந்து உலக கோப்பை நடத்துற நாளும்".. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு!!

SUNDAR PICHAI, SUNDAR PICHAI TWEETS, GOOGLE SEARCH, FIFA WORLD CUP FINALS, FIFAWC2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்